பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 4 பேர் உடல் கருகி பலி.. சிவகாசியில் அதிர்ச்சி!

sivakasi firecracker Fractory explosion : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 5க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரிகிறது. காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 4 பேர் உடல் கருகி பலி.. சிவகாசியில் அதிர்ச்சி!

பட்டாசு ஆலையில் வெடி விபத்து

Updated On: 

26 Apr 2025 13:42 PM

சிவகாசி, ஏப்ரல் 26: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 5க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரிகிறது. எம்.புதுப்பட்டியில் ராஜரத்தினம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இந்த வெடி விபத்து நடந்துள்ளது. இந்த பட்டாசு ஆலையில் 100க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், 2025 ஏப்ரல் 26ஆம் தேதியான இன்று பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பட்டாசு வெடித்து 4 தொழிலார்கள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டாசு ஆலையில் வெடி விபத்து

தமிழகத்திலேயே விருதுநகர் மாவட்டத்தில் தான் அதிகளவில் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்திற்கு பிரதான தொழிலாக பட்டாசு தயாரிப்புகள் இருந்து வருகிறது.  ஒவ்வொரு தீப்பாவளி பண்டிகைக்கு இங்கிருந்து பட்டாசு தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், இங்கு தீப்பெட்டி தயாரிப்புகளும் நடந்து வருகிறது.  ஆனால், இந்த பட்டாசு ஆலைகளில் அவ்வப்போது  வெடி விபத்து ஏற்பட்டு வருகிறது.  போதிய பாதுகாப்பு  வசதிகள் இல்லாமல் இருப்பதாலும், சரியான விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பதனாலும் விபத்துகள் நடந்து வருகிறது.

சிறிய பட்டாசு ஆலைகளில் விதி மீறல்களில் ஈடுபடும்போது வெடி விபத்துகள்  நிகழ்கின்றனர். இந்த நிலையில், 2025 ஏப்ரல் 26ஆம் தேதியான இன்று சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது, எம்.புதுப்பட்டியில் ராஜரத்தினம் என்பவரும் சொந்தமாக பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

4 பேர் உடல் கருகி பலி

இந்த பட்டாசு ஆலையில் 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.  இந்த நிலையில், இன்று வழக்கம் போல்  தொழிலாளர்கள் பணிக்கு வந்துள்ளனர். பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு இருந்தபோது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த வெடி விபத்து குறித்து அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் வந்தனர்.  வெடி விபத்தில் ரத்த காயங்களுடன் கிடந்த தொழிலாளர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், 4 பேர் உயிரிழந்ததாக கூறினார்.

மேலும், 5க்கும் மேற்பட்டோருக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அதிக வெயில் காரணமாக, ரசாயண கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக விபத்து நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.  இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.