என் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன.. சீமான் குற்றச்சாட்டு!
Seeman Alleges Phone Tapping | பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் தனது செல்போன் அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக குற்றம் சாட்டியிருந்த நிலையில், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் அதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த நிலையில், இது குறித்து சீமான் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சீமான்
சென்னை, ஏப்ரால் 21 : தனது செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக நாம் தமிழர் கட்சி (NTK – Naam Tamilar Katchi) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். நேற்று (ஏப்ரல் 20, 2025) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதுமட்டுமன்றி, பாட்டாளி மக்கள் கட்சி (PMK – Paatali Makkal Katchi), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (MDMK – Marumalarchi Dravida Munnetra Kazhagam) ஆகியவற்றின் உட்கட்சி பூசல் குறித்தும் அவர் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார். இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பின் சீமான் பேசியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பாமக, மதிமுக உட்கட்சி பிர்சனைகள் குறித்து பேசிய சீமான்
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், பாமகவில் ராமதாஸ் – அன்புமணி அதிமுகவில் வைகோ – துறை வைகோ என அக்கட்சியில் நடைபெற்று வரும் பிரச்னைகளால் நாட்டுக்கும் மக்களுக்கும் பிரச்சனை இல்லை. எந்த கட்சியில் தான் பிரச்சினை இல்லாமல் இருக்கிறது, அது அவர்கள் கட்சி பிரச்னை. அவர்களே பேசி சரி செய்து கொள்வார்கள் இதைப்பற்றி நாம் பேசுவது பண்பாடற்ற செயலாகும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜக தலைவர் நையினார் நாகேந்திரன் தனது செல்போன் உரையாடல்கள் எல்லாம் திமுக அரசால் ஓட்டு கேட்கப்படுவதாக சொல்லியிருந்தார். என்னுடைய செல்போன் அழைப்புகளும் தான் சுமார் 20 ஆண்டுகளாக ஒட்டுக் கேட்கப்படுகின்றன என அவர் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி, இந்திய அளவில் ஒட்டு கேட்கப்படும் சுமார் 50 தலைவர்களில் தானும் ஒருவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ் அறிக்கை
மருத்துவர் அய்யா அவர்களுக்கு
புகழ் சேர்க்கும் வகையில் பாமகவை தொடர்ந்து வழி நடத்திச் செல்வேன்!பாட்டாளி சொந்தங்களுக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை
(தலைமை நிலைய பதிவு) pic.twitter.com/dMN4XKCenM
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) April 12, 2025
கட்சிகளுக்கு இடையே நீடிக்கும் சிக்கல்
பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் பதவி வகித்து வந்த நிலையில், தானே மீண்டும் கட்சி தலைவராக தொடர்வதாக ராமதாஸ் சமீபத்தில் அறிவித்திருந்தார். அவரின் இந்த அறிவிப்பு கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவருடன் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தி வந்தனர். இதனை தொடர்ந்து பாமக தலைவராக தானே செயல்படுவதாக அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதேபோல கருத்து வேறுபாடுகள் காரணமாக முதன்மை செயலாளர் பதவியை ராஜினாமா செய்த துரை வைகோவின் ராஜினாம திரும்ப பெறப்பட்டது. இவ்வாறு சில கட்சிகளில் உட்கட்சி பூசல்கள் நடைபெற்று வருகிறது.