Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 அன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

Tamil Nadu School Reopening: கோடை விடுமுறைக்கு பிறகு ஜுன் 2, 2025 அன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் கோடை வெப்பம் அதிகமாக இருந்தால் கடந்த 2024 ஆண்டை போல கோடை விடுமுறை தள்ளிப்போகுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே எழுந்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 அன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 23 Apr 2025 20:41 PM

ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக ஏப்ரல் மாத இறுதியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த 2025 ஆண்டு கோடை வெப்பத்தின் (Summer) தாக்கம் காரணமாக  முன் கூட்டியே தேர்வுகள் நடத்தப்பட்டு விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.  அதன்படி, 1 ஆம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 07.04.2025 முதல் 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்வுகள் முடிந்ததும் அவர்களுக்கு கோடை விடுமுறை (Summer Holidays) அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 22ஆம் தேதியிலிருந்தும், 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதியிலிருந்தும் கோடை விடுமுறை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் தேர்வு முடிவுகளை வெளியிடும் பணி மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கான (Teachers) இறுதி வேலை நாள் 30ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2, 2025 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அந்தவகையில், மாணவர்கள் விடுமுறையை முடித்துக் கொண்டு மீண்டும் பள்ளிக்கு திரும்ப தயாராக வேண்டும் என்பதற்காக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்களின் தயாரிப்புகள் துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், பள்ளிகள் திறக்கும் தேதிக்கேற்ப பாடத்திட்டங்கள், ஆசிரியர் பணியாளர்கள் கலந்தாய்வு கூட்டங்கள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் தயாராக உள்ளனவெனவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி தொடக்கம் குறித்த அறிவிப்பை மனதில் கொண்டு தேவையான முன்னேற்பாடுகளை செய்யும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சமூக அறிவியல் தேர்வில் தவறான கேள்விக்கு மதிப்பெண்

தமிழ்நாட்டில், கடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சில தவறான கேள்விகளுக்கான புள்ளிகளை வழங்கவும், மாணவர்களின் நிலையை பரிசீலிக்கவும் சில ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன் படி 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் ஒரு மார்க் கேள்வி தவறாக இருப்பதாகவும், இதனால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் ஆசிரியர்கள் கருதினர். அதன் படி 4 ஆம் எண் கேள்விக்கு பதிலளிக்க முயற்சித்தாலே அதற்கு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கோடை வெப்பத்தின் காரணமாக விடுமுறை தள்ளிப்போகுமா?

பள்ளிகள் ஜூன் 2, 2025  அன்று  திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அந்த தேதி தள்ளிப் போகும் சாத்தியக்கூறு உள்ளது. காரணம், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் கடும் வெயிலால் பள்ளிகள் திறப்புத் தேதி ஒருவாரம் தள்ளி வைக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது.  வெயிலின் காரணமாக பல தரப்பிலிருந்தும் வந்த கோரிக்கைகளை ஏற்று பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்பட்டன. அதுபோல், இந்த வருடமும் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தால், பள்ளிகள் திறப்பு இன்னும் சில நாட்கள் தள்ளிப்போகும் வாய்ப்பு இருக்கிறது.

ஹிட் மேன் ரோஹித் அதிரடி 70! ஹைதராபாத் தோல்வியில் மூழ்கிய சோகம்!
ஹிட் மேன் ரோஹித் அதிரடி 70! ஹைதராபாத் தோல்வியில் மூழ்கிய சோகம்!...
600 பேரை பணி நீக்கம் செய்ய ஜொமேட்டோ முடிவு? – ஏஐ காரணமா?
600 பேரை பணி நீக்கம் செய்ய ஜொமேட்டோ முடிவு? – ஏஐ காரணமா?...
சிகிச்சை பலனின்றி இறந்த நாய்.. மருத்துவரைத் தாக்கிய இளம் பெண்!
சிகிச்சை பலனின்றி இறந்த நாய்.. மருத்துவரைத் தாக்கிய இளம் பெண்!...
வெற்றிக் கோப்பைகளுடன் அஜித் குமார்.. ரசிகர்களைக் கவரும் போட்டோ!
வெற்றிக் கோப்பைகளுடன் அஜித் குமார்.. ரசிகர்களைக் கவரும் போட்டோ!...
ரெட்ரோ மற்றும் ஹிட் 3 மோதல்... நானி கொடுத்த க்யூட் கமெண்ட் !
ரெட்ரோ மற்றும் ஹிட் 3 மோதல்... நானி கொடுத்த க்யூட் கமெண்ட் !...
அதில் நடித்தது எனது மனைவிக்கு சுத்தமா பிடிக்கல.. ஆர். மாதவன்!
அதில் நடித்தது எனது மனைவிக்கு சுத்தமா பிடிக்கல.. ஆர். மாதவன்!...
ஸ்லீப் டைவர்ஸ் என்றால் என்ன தெரியுமா? தனியாக தூங்கும் தம்பதிகள்!
ஸ்லீப் டைவர்ஸ் என்றால் என்ன தெரியுமா? தனியாக தூங்கும் தம்பதிகள்!...
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் - 1500க்கும் மேற்பட்டோர் கைது!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் - 1500க்கும் மேற்பட்டோர் கைது!...
வைடா? அவுட்டா? நேர்மையாக இருக்க முயற்சி! சிக்கலில் சிக்கிய இஷான்!
வைடா? அவுட்டா? நேர்மையாக இருக்க முயற்சி! சிக்கலில் சிக்கிய இஷான்!...
தரமான கேமரா வசதி கொண்ட Oppo K12s 5G ஸ்மார்ட்போன் - விலை எவ்வளவு?
தரமான கேமரா வசதி கொண்ட Oppo K12s 5G ஸ்மார்ட்போன் - விலை எவ்வளவு?...
எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்து.. புறக்கணித்த செங்கோட்டையன்!
எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்து.. புறக்கணித்த செங்கோட்டையன்!...