Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்…

Education Department: தமிழகத்தில் புதியதாக 1,915 முதுநிலை மற்றும் 1,205 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கு நிலுவையால் நியமனம் தாமதமாகியுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து 1.56 லட்சமாக இருப்பது கல்வித் தரத்தில் வளர்ச்சியைக் காட்டுகிறது.

பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்…
புதிய ஆசிரியர்கள் தேர்வு அமைச்சர் மகேஷ் அறிவிப்புImage Source: x
sivasankari-bose
Sivasankari Bose | Updated On: 25 Apr 2025 07:18 AM

சென்னை ஏப்ரல் 25: தமிழக சட்டப்பேரவையில் (Tamil Nadu Legislative Assembly) பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் (School Education Minister Mahesh) அறிவித்ததாவது, 1,915 முதுநிலை மற்றும் 1,205 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு (Master and Graduate Teachers Selection) செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் 3,087 முதுநிலை, 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்; வழக்கு நிலுவையில் இருப்பதால் நியமனம் தாமதமாகியுள்ளது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு 2,868 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2025 மார்ச் 1 முதல் 1,56,290 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர். பகுதி நேர ஆசிரியர்களை முழுநேரமாக மாற்றும் கோரிக்கையை முதல்வர் பரிசீலிக்கிறார். நீட் தேர்வில் விலக்கு பெறும் அரசின் சட்டப் போராட்டம் தொடரும்; அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது என்றார்.

புதிய ஆசிரியர்கள் தேர்வு: அமைச்சர் மகேஷ் அறிவிப்பு

பள்ளிக்கல்வித்துறையில் புதிதாக 1,915 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 1,205 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலை

சட்டசபையில் பேசிய அமைச்சர் கூறுகையில், கடந்த நான்கு ஆண்டுகளில் 3,087 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களது சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ஆனால், இதில் தொடர்புடைய வழக்கு நிலுவையில் இருப்பதால் பணி நியமனம் தாமதமாகியுள்ளது. வழக்கு முடிந்தவுடன், விரைவில் அவர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இடைநிலை ஆசிரியர் தேர்வும் நடைபெற்று வருகிறது

கடந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு, 2,868 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது, அவர்களது சான்றிதழ் சரிபார்ப்பு செயல்முறைகள் நடைபெற்று வருகின்றன. இதனுடன், 2025-ஆம் ஆண்டிற்குள் மேலும் 1,915 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 1,205 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

2025-ம் ஆண்டு மார்ச் 1 முதல் தற்போது வரை, அரசு பள்ளிகளில் மொத்தம் 1,56,290 மாணவர்கள் சேர்த்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இது அரசு பள்ளிகளின் மீதான நம்பிக்கையை உறுதி செய்கிறது என்றார்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு முழுநேர நம்பிக்கை

பகுதி நேர ஆசிரியர்களை முழுநேரமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் பரிசீலித்து, மாணவர்களின் நலனுக்கேற்ப நல்ல முடிவை எடுப்பார் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

நீட் தேர்வில் அரசின் நிலைபாடு தெளிவு

நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும் என்பது தி.மு.க. அரசின் நிலைத்த கொள்கை என அவர் சுட்டிக்காட்டினார். அதுவரை, அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி திட்டங்கள் தொடர்ந்து நடை பெறும் என்றும் உறுதியளித்தார்.

கடந்த ஆண்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் தயாரித்த மாதிரி வினாத்தாளிலிருந்து நேரடியாக 400 மதிப்பெண்ணுக்குரிய கேள்விகள் வந்துள்ளன. இது அரசு பள்ளிகளின் கல்வித் தரத்திற்கு ஒரு முக்கியமான சான்றாக அமைந்துள்ளது.

அரசியல் இல்லாமல் மாணவர் நலன்

மாணவர்களுக்கான திட்டங்களில் அரசியல் கலப்பில்லை எனவும், தி.மு.க அரசு தற்போது 67 பள்ளிக் கல்வித் திட்டங்களை செயல்படுத்தி வருவதால் மாணவர்கள் பலனடைகின்றனர் என்றும் அமைச்சர் மகேஷ் உறுதியாக தெரிவித்தார்.

மூகாம்பிகை தான் எல்லாம்.. இளையராஜாவின் ஆன்மிக அனுபவம்!
மூகாம்பிகை தான் எல்லாம்.. இளையராஜாவின் ஆன்மிக அனுபவம்!...
தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம்: விலகும் செந்தில் பாலாஜி?
தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம்: விலகும் செந்தில் பாலாஜி?...
துணைவேந்தர்கள் மாநாட்டை புறக்கணித்த தமிழக அரசு பல்கலைக்கழகங்கள்..
துணைவேந்தர்கள் மாநாட்டை புறக்கணித்த தமிழக அரசு பல்கலைக்கழகங்கள்.....
விபூதி பிரசாதமாக புற்றுமண்.. ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோயில்!
விபூதி பிரசாதமாக புற்றுமண்.. ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோயில்!...
காஷ்மீரில் பதற்றம்.. முக்கிய பயங்கரவாதி சுட்டுக் கொலை!
காஷ்மீரில் பதற்றம்.. முக்கிய பயங்கரவாதி சுட்டுக் கொலை!...
டொவினோ தாமஸின் நரிவேட்ட படத்தின் ட்ரெய்லர் இதோ!
டொவினோ தாமஸின் நரிவேட்ட படத்தின் ட்ரெய்லர் இதோ!...
6 பேக் முதலில் வைத்தது நானும் இல்லை சூர்யாவும் இல்லை...
6 பேக் முதலில் வைத்தது நானும் இல்லை சூர்யாவும் இல்லை......
வீட்டில் கண்ணாடி பொருட்கள் உடைவது நல்லதா? கெட்டதா?
வீட்டில் கண்ணாடி பொருட்கள் உடைவது நல்லதா? கெட்டதா?...
திருவாலங்காடு அருகே தண்டவாளத்தில் ரயிலை கவிழ்க்க சதி முயற்சி..?
திருவாலங்காடு அருகே தண்டவாளத்தில் ரயிலை கவிழ்க்க சதி முயற்சி..?...
நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதி.. மதுரை கோர்டில் பரபரப்பு
நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த கைதி.. மதுரை கோர்டில் பரபரப்பு...
குரூப் 4 தேர்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
குரூப் 4 தேர்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...