Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சேலம்: குப்பை தகராறில் கொலை முயற்சி..? லாரி மூலம் காரை இடித்து சேதம்!

Dispute erupts over garbage dumping: சேலத்தில் குப்பை கொட்டியதை மையமாகக் கொண்டு ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியது. பூபதி, உறவினர்களுடன் சேர்ந்து அனிதாவின் கார் மீது லாரியை ஏற்றி சேதப்படுத்தினார். சிசிடிவி காட்சிகள் பரவி பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்: குப்பை தகராறில் கொலை முயற்சி..? லாரி மூலம் காரை இடித்து சேதம்!
குப்பை கொட்டுவதில் வெடித்த தகராறுImage Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Updated On: 20 Apr 2025 15:32 PM

சேலம் ஏப்ரல் 20: சேலம் மாவட்டம் (Salem) அம்மம்பாளையத்தில் குப்பை கொட்டியதை வைத்து அனிதா மற்றும் பூபதி என்ற அக்கம்பக்கத்தினர் (Neighbors) இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு வன்முறையாக மாறி, பூபதி தனது உறவினர்களுடன் சேர்ந்து அனிதாவின் கார் மீது லாரியை ஏற்றினார் என புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கார் பெரிதும் சேதமடைந்துள்ளது. அனிதா ஆத்தூர் போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பூபதி மற்றும் அவரது உறவினர்கள் மீது நடவடிக்கை (Action against Bhupathi and his relatives) எடுக்கப்படுமா என்பது கவனிக்கப்படுகின்றது. அம்மம்பாளையத்தில் வசிக்கும் அனிதாவுக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரரான பூபதிக்கும் இடையே குப்பை கொட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு வன்முறையாக மாறியதில், ஆத்திரமடைந்த பூபதி தனது உறவினர்களுடன் சேர்ந்து அனிதாவின் கார் மீது லாரியை ஏற்றியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி

அம்மம்பாளையத்தில் வசிக்கும் அனிதா என்பவர் தனது வீட்டின் அருகே குப்பை கொட்டியதாக கூறப்படுகிறது. இதனை பூபதி என்பவர் தட்டிக்கேட்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் பின்னர் தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த பூபதி, தனது உறவினர்களை வரவழைத்து அனிதாவின் கார் மீது லாரியை ஏற்றியதாக அனிதா குற்றம் சாட்டியுள்ளார். இந்த தாக்குதலில் கார் பலத்த சேதமடைந்துள்ளது.

ஆத்திரமடைந்த பூபதி, தனது உறவினருடன் இணைந்து அனிதாவின் காரில் லாரி ஏற்றி சேதப்படுத்தினார். இதனால் காரின் முன்பகுதி மோசமாக சேதமடைந்தது மற்றும் அனிதா மீது கொலைமுயற்சி புகார் அளிக்கப்பட்டது. ஆத்தூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை தேடி வருகின்றனர்.

காவல்துறை விசாரணை

இந்த சம்பவம் குறித்து அனிதா ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பூபதி மற்றும் அவரது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பரபரப்பான சூழல்

லாரியை வைத்து காரை இடிக்கும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதால், மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெயிலும் மழையும் தொடரும் – வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை
வெயிலும் மழையும் தொடரும் – வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை...
எலுமிச்சையை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? ஆச்சரிய தகவல்!
எலுமிச்சையை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? ஆச்சரிய தகவல்!...
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!
சிகிச்சைக்காக வந்த முதியவரை தர தரவென இழுத்து சென்ற டாக்டர்!...
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய MI! CSK நம்பிக்கையை உடைத்து வெற்றி...
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்
சாதிக்கவேண்டும் என்ற வெறியிருக்கு.. அந்த ஆசை எனக்கு- நடிகர் அஜித்...
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!
படம் வெற்றிபெற காமாக்யா கோவிலில் தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா!...
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!
அதிரடி நகைச்சுவை.. மிர்ச்சி சிவாவின் சுமோ படத்தின் ட்ரெய்லர்!...
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?
நம் பேச்சை ஒட்டு கேட்கும் ஸ்மார்ட்போன் - எப்படி தவிர்ப்பது?...
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?
பெங்களூருவில் மனைவியால் கொல்லப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி?...
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!
அவரால் தான் நான் நடிக்கவில்லை... வடிவேலு பேச்சு!...
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்
பணக்காரர்களின் கடன் வாங்கும் யுக்தி - வரியைத் தவிர்க்க செம பிளான்...