ராமதாஸ் உடன் குடும்பத்தினர் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை!

Ramadoss Discussion with Family Members | திண்டிவனத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ராமதாசின் மகள்கள் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ள நிலையில், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நீடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமதாஸ் உடன் குடும்பத்தினர் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை!

ராமதாஸ்

Updated On: 

10 Apr 2025 22:09 PM

திண்டிவனம், ஏப்ரல் 10 : திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி (PMK – Pattali Makkal Katchi) தலைவர் மற்றும் நிறுவனர் ராமதாஸ் உடன் அவரது மகள்கள் காந்திமதி, கவிதா, உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் கட்சி உறுப்பினர்கள் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், திண்டிவனத்தில் ராமதாஸ் உடன் குடும்ப உறுப்பினர்கள் மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தை குறித்து விரிவாக பார்க்கலாம்.

தன்னை தானே தலைவராக அறிவித்துக்கொண்ட ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்புமணி ராமதாஸ் பதவியேற்றார். இந்த நிலையில், பாமக கட்சியின் வளர்ச்சிக்காகவும் தேர்தலை கருத்தில் கொண்டும், அந்த கட்சியின் தலைவராக இருந்த தனது மகன் அன்புமணி ராமதாசை நீக்கிவிட்டு கட்சியின் நிறுவனர் என்ற பெயரில் தானே பாமக தலைவராக செயல்பட உள்ளதாக ராமதாஸ் இன்று (ஏப்ரல் 10, 2025) அறிவித்தார். மேலும், கட்சியின் தலைவராக பொருப்பு வகித்து வந்த அன்புமணி ராமதாஸ் இனிமே செயல்தலைவராக செயல்படுவார என்றும் அவர் கூறியிருந்தார்.

ராமதாசின் இந்த அறிவிப்பு உட்கட்சி மட்டுமன்றி அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏறப்டுத்தியது. ராமதாசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. அவரின் இந்த அறிவிப்பால் தொண்டர்களும் கடும் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில், ராமதாசின் இந்த முடிவை மாற்றிக்கொள்ள கோரியும், மீண்டும் அன்புமணி ராமதாசை கட்சியின் தலைவராக அறிவிக்க வேண்டும் என்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் அவரிடம் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமதாசுடன் 3 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் குடும்பத்தினர்

ராமதாசின் இந்த அறிவிப்பு கட்சி உறுப்பினர்களை கடும் குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சி உறுப்பினர்கள் சிலர் ராமதாசிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர். ராமதாஸ் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள நிலையில், அவரை நேரில் சந்தித்து குடும்பத்தினர் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ராமதாசின் மகள்கள் காந்திமதி, கவிதா மற்றும் கட்சி உறுப்பினர்கள் சிலர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அன்புமணி ராமதாசையே மீண்டும் தலைவராக அறிவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தன்னை சந்திக்க நீண்ட நேரமாக காத்திருந்த கட்சியின் பொருளாளர் திலகபாமாவையும் அவர் சந்தித்த மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.