கனவிலும் நினைக்க முடியாத தண்டனை வழங்கப்பட வேண்டும்.. பஹல்காம் தாக்குதல் குறித்து நடிகர் ரஜினி ஆவேசம்!
Rajinikanth Condemns Pahalgam Terror Attack | பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், காஷ்மீரில் அமைதி திரும்பியுள்ளது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

சென்னை, ஏப்ரல் 25 : காஷ்மீரில் (Kashmir) அமைதி திரும்பியுள்ளது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் பஹல்காம் (Pahalgam) தாக்குதல் குறித்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், பஹல்காம் தாக்குதல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஏராளமானோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அவர் கூறியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சுற்றுலா பயணிகள்
இந்தியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குவது தான் ஜம்மு & காஷ்மீர். இந்த நிலையில், ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சில சுற்றுலா பயணிகள் இருந்தனர். அப்போது அவர்கள் மீது திடீரென பயங்கரவாத அமைப்பு ஒன்று திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியது. இந்த கொடூர தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front) பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது. இந்த நிலையில், இந்திய அரசு பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்
கஷ்மீரில் அமைதி நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு கனவிலும் நினைக்காத தண்டனை வழங்கப்பட வேண்டும். மத்திய அரசு அதை செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. – நடிகர் ரஜினிகாந்த் #Rajinikanth #PahalgamTerroristAttack #IndianArmy #TamilNadu pic.twitter.com/waQZjZVIn9
— Puviarasan (@here__earth) April 25, 2025
நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் இருக்கும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், படப்பிடிப்பில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், பஹல்காம் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ஜம்மு & காஷ்மீரில் அமைதி நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. பெஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு கனவிலும் நினைக்க முடியாத தண்டனை வழங்கப்பட வேண்டும். மத்திய அரசு அதை செய்யும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.