Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கொடைக்கானலுக்கு படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்… சுற்றுலாப்பயணிகள் கண்டு உற்சாகம்…

Kodaikanal's Star Lake: கொடைக்கானல், சாரல் மழையுடன் குளிர்ந்த சூழலுக்கு கோடை விடுமுறையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். கேரளா மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் கோக்கர்ஸ்வாக், மோயர் பாயிண்ட், நட்சத்திர ஏரி போன்ற இடங்களில் சுற்றிய வருகின்றனர். சுற்றுலா வளர்ச்சியுடன் வியாபாரிகளுக்கு சிறந்த வருமானம் கிடைக்கின்றது.

கொடைக்கானலுக்கு படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்… சுற்றுலாப்பயணிகள் கண்டு உற்சாகம்…
கொடைக்கானலுக்கு படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்Image Source: pinrest
sivasankari-bose
Sivasankari Bose | Updated On: 28 Apr 2025 10:46 AM

கொடைக்கானல் ஏப்ரல் 28: கொடைக்கானல் (kodaikanal), வெயிலின் சூழலில், சாரல் மழையுடன் குளிர்ந்ததாக காணப்படுகிறது. கோடை விடுமுறையினைத் (Summer Holiday) தொடங்கிய நிலையில், கேரளா மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். கோக்கர்ஸ்வாக், மோயர் பாயிண்ட், குணா குகை போன்ற இடங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. இயற்கையின் அழகை அனுபவிக்கும் போது, தாய்லாந்து, பாங்காங் இடங்களில் காணப்படும் பர்ப்பிள் பாண்ட் ஹேரோன் பறவையும் வந்துள்ளது. கொடைக்கானலில் சுற்றுலா வளர்ச்சி அதிகரித்து, வியாபாரிகளுக்கு சிறந்த வருமானம் கிடைத்துள்ளது.

கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகளின் வரவேற்பு

கொடைக்கானல், தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பரபரப்பான சுற்றுலா பயணிகளுக்கு வரவேற்பு அளிக்கின்றது. தமிழகம் முழுவதும் வெயில் திடுக்கிடும் காலத்தில், கொடைக்கானலில் சாரல் மழை பெய்து குளிர்ந்த சூழ்நிலை தற்போது இங்கே உருவாகியுள்ளது.

சுற்றுலா பயணிகளின் வருகை

கோடை விடுமுறை தொடங்கியதால், கொடைக்கானலுக்கு உற்றிலும் அண்டை மாநிலங்களான கேரளா, மகாராஷ்ட்ரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். 2025 ஏப்ரல் 27 நேற்று பகல் நேரத்தில் திடீரென பெய்த சாரல் மழையை தொடர்ந்து, நகரின் முக்கிய இடங்களான அப்சர்வேட்டரி, அண்ணாசாலை மற்றும் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் கனமழை பெய்து, சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

மழையால் உற்சாகமடைந்த மக்கள்

இதை அடுத்து, சுற்றுலா பயணிகள் உற்சாகமாக மழையில் நனைந்து ஏரிச்சாலையை சுற்றி உலாவினர். நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். கோக்கர்ஸ்வாக், மோயர் பாயிண்ட், பைன்பாரஸ்ட், குணா குகை, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்களிலும் மக்களின் கூட்டம் அதிகரித்தது.

அதிகரித்து வரும் வெளிநாட்டு பறவைகளின் படையெடுப்பு

கொடைக்கானல், ஐரோப்பாவின் சீதோஷ்ண நிலைகளைப் போன்ற சூழ்நிலையைக் கொண்டுள்ளது, இதனால் பல காலங்களில் இடம் பெயர்ந்து வரும் பறவைகள் கொடைக்கானலுக்கு வருவதை நாம் காண முடிகிறது. அதேபோல், தாய்லாந்து, பாங்காங் மற்றும் மலை பிரதேசங்களில் காணப்படும் பர்ப்பிள் பாண்ட் ஹேரோன் என்ற வெளிநாட்டு பறவை, நட்சத்திர ஏரியில் உலாவிக்கொண்டிருந்தது. இதனைப் பார்த்த சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் நீண்ட நேரம் ரசித்தனர்.

சுற்றுலா வளர்ச்சி அதிகரிப்பு

கேரளா மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் கோக்கர்ஸ்வாக், மோயர் பாயிண்ட், நட்சத்திர ஏரி போன்ற இடங்களில் சுற்றிய வருகின்றனர். சுற்றுலா வளர்ச்சியுடன் வியாபாரிகளுக்கு சிறந்த வருமானம் கிடைக்கின்றது.

தொடர்ந்து வரும் விடுமுறைகள் காரணமாக, கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார மலை கிராமங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால், கோடை சீசன் முழுவதும் கொடைக்கானல் மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சிறந்த வருமானத்தை அளித்துள்ளது.

1.5 டன் ஏசி பயன்படுத்துகிறீர்களா? மாத மின் கட்டணம் எவ்வளவு ஆகும்?
1.5 டன் ஏசி பயன்படுத்துகிறீர்களா? மாத மின் கட்டணம் எவ்வளவு ஆகும்?...
கொரோனாவை கண்டறியும் நானோ தொழில்நுட்பம்.. பதஞ்சலி ஆய்வில் தகவல்
கொரோனாவை கண்டறியும் நானோ தொழில்நுட்பம்.. பதஞ்சலி ஆய்வில் தகவல்...
பெற்றோர்களின் விவாகரத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி இருந்தது?
பெற்றோர்களின் விவாகரத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி இருந்தது?...
பிரம்ம முகூர்த்த வழிபாடு.. இந்த நிற திரி பயன்படுத்தினால் பலன்!
பிரம்ம முகூர்த்த வழிபாடு.. இந்த நிற திரி பயன்படுத்தினால் பலன்!...
அமைச்சர் ஐ.பெரியசாமி விடுதலை ரத்து! மீண்டும் சிக்கலில் அமைச்சரவை!
அமைச்சர் ஐ.பெரியசாமி விடுதலை ரத்து! மீண்டும் சிக்கலில் அமைச்சரவை!...
படத்திற்காக மட்டும்தான் சிகிரெட் பிடிக்கிறேன்.. சூர்யா பேச்சு!
படத்திற்காக மட்டும்தான் சிகிரெட் பிடிக்கிறேன்.. சூர்யா பேச்சு!...
ஹாட்ஸ்டாரில் பார்க்க வேண்டிய 5 சிறந்த கிரைம் திரில்லர் படங்கள்
ஹாட்ஸ்டாரில் பார்க்க வேண்டிய 5 சிறந்த கிரைம் திரில்லர் படங்கள்...
பராசக்தியை தொடர்ந்து சுதா கொங்கராவின் இயக்கத்தில் இந்த நடிகரா?
பராசக்தியை தொடர்ந்து சுதா கொங்கராவின் இயக்கத்தில் இந்த நடிகரா?...
அட்சய திருதியை 2025: PhonePe மற்றும் Paytm அளிக்கும் சலுகைகள்!
அட்சய திருதியை 2025: PhonePe மற்றும் Paytm அளிக்கும் சலுகைகள்!...
எந்த கடவுளையும் தொல்லை செய்வது இல்லை.. வடிவுக்கரசியின் அனுபவங்கள்
எந்த கடவுளையும் தொல்லை செய்வது இல்லை.. வடிவுக்கரசியின் அனுபவங்கள்...
காஷ்மீர் போன்ற ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெறாது - முதல்வர்!
காஷ்மீர் போன்ற ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெறாது - முதல்வர்!...