2025-26 கல்வியாண்டில் தமிழக பள்ளிகளில் கல்விக்கட்டணம் உயர்கிறதா?
Private schools in Tamil Nadu: தமிழகத்தில் தனியார் பள்ளிகள் 2025-28 கல்வியாண்டுகளுக்கான கட்டண விண்ணப்பங்களை 2025 மே 15க்குள் tnfeecommittee.com இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கட்டண உயர்வு தேவையில்லாத பள்ளிகள் விண்ணப்பிக்க தேவையில்லை. விண்ணப்பிக்கும் பள்ளிகள் மாணவர்-ஆசிரியர் எண்ணிக்கை, ஊழியர் சம்பளம் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

சென்னை ஏப்ரல் 21: தமிழகத்தில் தனியார் பள்ளிகள் (Private Schools in Tamil Nadu) 2025-26, 2026-27 மற்றும் 2027-28 ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணங்களை நிர்ணயிக்க வரும் 2025 மே 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும் (Applications May 15, 2025 to fix tuition fees). கட்டண நிர்ணயத்துக்கான விண்ணப்பங்கள் tnfeecommittee.com இணையதளத்தில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். கட்டண உயர்வு தேவைப்படாத பள்ளிகள் விண்ணப்பிக்க தேவையில்லை. பள்ளிகள், மாணவர்-ஆசிரியர் எண்ணிக்கை, ஊழியர் சம்பளம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். கட்டணம் நிர்ணயப்பட்ட பின்பு, தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். பெற்றோர் சந்தேகம் இருந்தால் நேரடியாக புகார் செய்யலாம் என பள்ளி கல்வித்துறை (School Education Department) தெரிவித்துள்ளது.
தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண விண்ணப்பம் மே 15-க்குள் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள், வரும் 2025-26, 2026-27 மற்றும் 2027-28 ஆகிய கல்வியாண்டுகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயத்துக்கான விண்ணப்பங்களை 2025 மே 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கல்விக்கட்டண நிர்ணயக் குழுவின் அறிவுறுத்தல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள்
தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை முறைப்படுத்தும் நோக்கில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கல்விக்கட்டண நிர்ணயக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆர். பாலசுப்ரமணியன் பதவியில் உள்ளார்.
மூன்று கல்வியாண்டுகளுக்கான கட்டண பரிந்துரை
இந்த குழு, ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை பள்ளிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள் மற்றும் செலவுகளை கருத்தில் கொண்டு கட்டணத்தை நிர்ணயிக்கிறது. தற்போது வரவுள்ள மூன்று கல்வியாண்டுகளுக்கான கட்டண பரிந்துரை பெறும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பல தனியார் பள்ளிகள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகின்றன. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் விண்ணப்பித்துள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் உள்ள பள்ளிகள்
கல்விக் கட்டணத்தை உயர்த்த விரும்பும் பள்ளிகள் மட்டுமே, [tnfeecommittee.com](http://tnfeecommittee.com) என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கட்டண உயர்வு தேவையில்லை என கருதும் பள்ளிகள் விண்ணப்பிக்க தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.
விரிவான ஆவணங்கள் தேவை
விண்ணப்பிக்கும் பள்ளிகள், மாணவர் மற்றும் ஆசிரியர் எண்ணிக்கை, ஊழியர்களுக்கான சம்பள விவரங்கள், கடந்த கல்வியாண்டின் வரவுச் செலவுத் தகவல்கள் ஆகியவை தணிக்கை துறையிடமிருந்து பெற்ற ஆவணங்களுடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.
கல்விக்கட்டண நிர்ணயக் குழுவிடம் புகார் அளிக்கலாம்
கட்டண நிர்ணயத்திற்கு பின், அனைத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்படும். அதனை பெற்றோர்கள் பார்வையிட்டு, ஏதேனும் மேலதிக கட்டணம் வசூலிக்கப்படும் சந்தேகம் இருந்தால், நேரடியாக கல்விக்கட்டண நிர்ணயக் குழுவிடம் புகார் அளிக்கலாம் எனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.