Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Pollachi Case Verdict: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு.. வருகின்ற மே 13ம் தேதி தீர்ப்பு என அறிவிப்பு!

Pollachi Harassment Case: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், 9 பேர் மீதான தீர்ப்பு 2025 மே 13 அன்று வெளியாகிறது. கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி அறிவித்துள்ளார். 2019ல் தொடங்கிய இந்த வழக்கில், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, வீடியோ எடுக்கப்பட்டது. 200க்கும் மேற்பட்ட கேள்விகள் குற்றவாளிகளிடம் கேட்கப்பட்டன. இந்தியா முழுவதையும் உலுக்கிய இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pollachi Case Verdict: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு.. வருகின்ற மே 13ம் தேதி தீர்ப்பு என அறிவிப்பு!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு
mukesh-kannan
Mukesh Kannan | Published: 28 Apr 2025 18:56 PM

கோவை, ஏப்ரல் 28: தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியா முழுவதையும் உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை (Pollachi Harassment Case) வழக்கை கோவை மகளிர் நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், வருகின்ற 2025 மே மாதம் 13ம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து விரட்டியதாக 9 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் வருகின்ற 2025 மே 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் (Pollachi Case Verdict) என கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி அறிவித்துள்ளார். முன்னதாக, பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் கடந்த 2025 ஏப்ரல் 26ம் தேதி கோவையில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 313 கீழ் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணை:

கடந்த 2023 பிப்ரவரி 23ம் தேதி தொடங்கிய விசாரணைக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட நீதிமன்ற அறையில், நீதிபதி நந்தினிதேவி முன் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். தமிழ்நாடு அரசு சார்பில் அளிக்கப்பட்ட ஆதாரங்களில் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரிடமும் சுமார் 200க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2025 ஏப்ரல் 26ம் தேதி காலை தொடங்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை மாலை வரை நீடித்தது. இந்த வழக்கு விசாரணை முழுவதும் வீடியோ கேமாரா முன்பு நடத்தப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யதாகவும், அவர்களின் சம்மதமின்றி வீடியோக்களை பதிவு செய்து மிரட்டி பணம் பறித்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பல்வேறு வழக்குகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது வருகின்ற 2025 மே 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி அறிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் யார் யார்..?

  1. சபரிராஜன்-28
  2. திருநாவுக்கரசு -30
  3. சதீஷ் -32
  4. வசந்தகுமார்- 27
  5. மணி என்கிற ஆர்.மணிவண்ணன்-33
  6. அருளானந்தம்-36
  7. பாபு, ‘பைக்’ பாபு, 29
  8. ஹரோனிமஸ் பால் -31
  9. அருண்குமார், 31

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சேலத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.சாட்சி விசாரணைகள் முடிந்தவுடன் வழக்கின் தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், வருகின்ற 2025 மே 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளதால் எது மாதிரியான தீர்ப்பு வெளியாகும் என இந்தியாவே காத்திருக்கிறது.

கோடைகாலம் உஷார்... கண்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் கவனிக்கவும்
கோடைகாலம் உஷார்... கண்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் கவனிக்கவும்...
ஸ்ரேயாவின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா? அவரே சொன்ன சீக்ரெட்!
ஸ்ரேயாவின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா? அவரே சொன்ன சீக்ரெட்!...
என் பதிவை தவறாக புரிந்து கொண்டோர் கவனத்திற்கு... விஜய் ஆண்டனி
என் பதிவை தவறாக புரிந்து கொண்டோர் கவனத்திற்கு... விஜய் ஆண்டனி...
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் 6 அமைச்சர்கள்.. யார் யார்?
சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் 6 அமைச்சர்கள்.. யார் யார்?...
2028 முதல் 94 போட்டிகள்! ஐபிஎல்லில் அதிகரிக்கும் ஆட்டங்கள்..!
2028 முதல் 94 போட்டிகள்! ஐபிஎல்லில் அதிகரிக்கும் ஆட்டங்கள்..!...
AI-ஆல் வேலை போகாது - டிசிஎஸ் நிறுவனத்தின் ஏஐ தலைவர்
AI-ஆல் வேலை போகாது - டிசிஎஸ் நிறுவனத்தின் ஏஐ தலைவர்...
அமைச்சராக பொறுப்பேற்ற மனோ தங்கராஜ்.. பால்வளத்துறை ஒதுக்கீடு!
அமைச்சராக பொறுப்பேற்ற மனோ தங்கராஜ்.. பால்வளத்துறை ஒதுக்கீடு!...
விஜய் சேதுபதியின் தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடி இந்த நடிகையா?
விஜய் சேதுபதியின் தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடி இந்த நடிகையா?...
ATM-ல் பணம் எடுத்தல், ரயில் டிக்கெட் முன்பதிவு - முக்கிய மாற்றம்
ATM-ல் பணம் எடுத்தல், ரயில் டிக்கெட் முன்பதிவு - முக்கிய மாற்றம்...
இனி ஸ்மார்ட் வாட்ச், கார்களிலும் ஜெமினி ஏஐ - கூகுள் சிஇஓ சுந்தர்
இனி ஸ்மார்ட் வாட்ச், கார்களிலும் ஜெமினி ஏஐ - கூகுள் சிஇஓ சுந்தர்...
வெள்ளி கறுக்குதா? வீட்டிலேயே எளிதாக பளபளப்பாக்கலாம்!
வெள்ளி கறுக்குதா? வீட்டிலேயே எளிதாக பளபளப்பாக்கலாம்!...