விஜய்க்கு புது பிரச்னை.. சிக்கிக் கொண்ட த.வெ.க நிர்வாகிகள்… கோவை போலீஸ் அதிரடி!

Tamilaga Vettri Kazhagam Vijay : தமிழக வெற்றிக் கழக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சி தலைவர் விஜய் வந்தபோது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது கோவை பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விமான நிலையத்திற்குள பயணிகளுக்கு இடையூறு, தடுப்புகள் உள்ளிட்டவற்றை உடைத்த சம்பவங்களுக்காகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விஜய்க்கு புது பிரச்னை.. சிக்கிக் கொண்ட த.வெ.க நிர்வாகிகள்... கோவை போலீஸ் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகம் விஜய்

Updated On: 

27 Apr 2025 10:23 AM

கோயம்புத்தூர், ஏப்ரல் 27: கோயம்புத்தூர் விமான நிலையத்தில் முன்னறிவிப்பு இல்லாமல் அதிக அளவில் மக்களை திரட்டி இடையூறு ஏற்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழக (Tamilaga Vettri Kazhagam) நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர் தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் சம்பத்குமார் உள்ளிட்டோர் மீது பீளமேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.,  தமிழ் சினிமாவில் உட்சபட்ச நடிகராக இருக்கும் விஜய், கடந்த 2024ஆம் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி, அடுத்த ஆண்டு 2026ல் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்.

விஜய்க்கு புது பிரச்னை

கட்சியை அனைத்து மட்டத்திலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில், வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்களை விஜய் நடத்தி வருகிறார். அதன்படி, கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு 2025 ஏப்ரல் 26ஆம் தேதியான நேற்று நடைபெற்றது.

கோவையில் குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில், ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுக்கான கருத்தரங்கு 2025 ஏப்ரல் 26ஆம் தேதியான நேற்று மாலை 3 மணிக்கு நடைபெற்று, மாலை 6 மணி வரைக்கு முடிவடைந்தது.

முன்னதாக, கருத்தரங்களில் கலந்து கொள்வதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் 2025 ஏப்ரல் 26ஆம் தேதி 11 மணிக்கு கோவை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிக்கிக் கொண்ட த.வெ.க நிர்வாகிகள்


அப்போது விமான நிலையத்தில் நிர்வாகிகள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர். மேலும், விஜய் விமான நிலையத்திற்கு வந்த விஜய், வேனில் நின்றபடி தொண்டர்களை சந்தித்தார்.

விமான நிலையம் முதல் ஹோட்டல் வரை வேனில் சென்ற விஜய் 3 இடங்களில் வேனின் மேல் நின்றப்படி தொண்டர்களை பார்த்து கை அசைத்தார். ரோடு ஷோ போல நடந்த இந்த நிகழ்ச்சியில் தொண்டர்கள் பலரும் குவிந்தனர். இதனால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கில் விஜய் கலந்து கொள்ள வரும்போது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அக்கட்சி தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருககிறது. கோவை பீளமேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. கார், பைக் உள்பட 133 வாகனங்கள் மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்ததாக தெரிகிறது.