நீலகிரி: இன்று முதல் 4 முக்கிய சோதனை சாவடிகளில் மட்டுமே இ-பாஸ் கட்டுப்பாடு
Ooty E-Pass: நீலகிரியில் 2025 ஏப்ரல் 22 முதல் இ-பாஸ் கட்டுப்பாடு நான்கு முக்கிய சோதனை சாவடிகளில் மட்டுமே அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சுற்றுச்சூழலையும் போக்குவரத்து நெரிசலையும் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இந்த நடைமுறை அமலாக்கப்படுகிறது.

நீலகிரி ஏப்ரல் 22: நீலகிரியில் (Ooty) இ-பாஸ் (E-Pass) நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2025 ஏப்ரல் 22 முதல் கல்லாறு, குஞ்சப்பணை, மசினகுடி, மேல்கூடலூர் என்ற நான்கு சோதனை சாவடிகளில் மட்டுமே இ-பாஸ் கட்டுப்பாடு அமலும். ஏற்கனவே 2025 ஏப்ரல் 1 முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. வார நாட்களில் 6,000 வாகனங்கள், வார இறுதிகளில் 8,000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த மாற்றம் அமலாக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாட்டுக்காக இ-பாஸ் நடைமுறை தொடரப்படுகிறது.
நீலகிரியில் இ-பாஸ் நடைமுறையில் மாற்றம்
நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையில் முக்கிய மாற்றத்தை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் கோடை காலத்தை முன்னிட்டு, ஏற்கனவே 2025 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில், 2025 ஏப்ரல் 22ஆம் தேதி முதல் இ-பாஸ் கட்டுப்பாடு கல்லாறு, குஞ்சப்பணை, மசினகுடி, மேல்கூடலூர் என்ற நான்கு முக்கிய சோதனை சாவடிகளில் மட்டுமே நடைமுறைக்கு வரவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவித்துள்ளார்.
வார இறுதிகளில் வாகன வரத்து அதிகம்
வார நாட்களில் 6,000 வாகனங்களுக்கு, வார இறுதிகளில் 8,000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் உள்ளூர் வணிகர்களின் வருமானத்தை பாதிப்பதாக கூறி, அவர்கள் இ-பாஸ் முறையை நீக்க கோரிக்கை விடுத்தனர்.
உயர்நீதிமன்ற உத்தரவின் பின்னணி
சென்னை உயர்நீதிமன்றத்தில் 2025 ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, இ-பாஸ் சோதனை முக்கிய நுழைவு சாவடிகளில் மட்டும் தொடரலாம் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, கல்லாறு, குஞ்சப்பணை, மசினகுடி மற்றும் மேல்கூடலூர் ஆகிய நான்கு சோதனை சாவடிகளில் மட்டுமே இ-பாஸ் சோதனை நடைபெறும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான நடவடிக்கை
நீலகிரி மாவட்டம் தனது இயற்கை அழகு மற்றும் குளிர்ந்த வானிலையால் சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்பமான இடமாக விளங்குகிறது. இந்த பயணிகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி, போக்குவரத்து நெரிசலை குறைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டு வருகிறது.
கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் சுற்றுலா பயணிகள் பெரிதும் திரளும் சூழ்நிலையில், போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இ-பாஸ் நடைமுறைத் தொடரப்படுகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழலையும், வனவிலங்குகளையும் பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து நெரிசல்
கேரளாவிலிருந்து வரும் பல சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெறாமல் வருவதால், சோதனைச் சாவடிகளில் பணியாற்றும் அதிகாரிகள் அவர்களுக்கு இடத்தில் இ-பாஸ் எடுத்து கொடுத்து அனுமதி வழங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஒவ்வொரு வாகனத்தையும் தனித்தனியாக சோதனை செய்து அனுமதிக்க வேண்டி இருப்பதால், போக்குவரத்து நெரிசல் பெரிதும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.