Weather Alert: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை மற்றும் மழை முன்னறிவிப்பு
Chance of rain in Tamil Nadu: தென்னிந்திய பகுதிகளின் வளிமண்டல கீழடுக்கு பகுதியில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்றுகள் சந்திக்கும் நிலைமை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இரவு வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஏப்ரல் 27: தூத்துக்குடி மற்றும் தென்தமிழக கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி (New wind circulation in the South Tamil Nadu) உருவாகியுள்ளது. இதனால், தென் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வாளர் ராஜா (Meteorologist Raja) தெரிவித்தார். தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை ஆகிய பகுதிகளில் மிதமான மழை, சில இடங்களில் கனமழை காத்திருக்கின்றது. மேலும், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்தமிழகத்தில் புதிய காற்று சுழற்சி உருவாகி மழைக்கு வாய்ப்பு
தூத்துக்குடி மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்தமிழக கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, எதிர்வரும் 3 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தென்காசி மாவட்ட தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்தார்.
மழை நிலவரம்
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி மற்றும் சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
குறிப்பாக, அம்பாசமுத்திரம், மாஞ்சோலை, கோதையாறு, சிவகிரி, புளியங்குடி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, களக்காடு, நாங்குநேரி ஆகிய பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகும் வாய்ப்பு உள்ளது.
இடி-மின்னலும் எதிர்பார்ப்பு
இந்த மழைக்காலத்தின்போது, தென் மாவட்டங்களில் தரைக்காற்று பலமாக வீசும். இடி-மின்னலும் வலுவாக இருக்கும் என்று ஆய்வாளர் ராஜா கூறினார். இதன் காரணமாக, பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பது முக்கியம்.
செல்சியஸ் வெப்பநிலை குறைவு, மழை வாய்ப்பு
கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் குறைந்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
அடுத்த 7 தினங்களுக்கு வானிலை முன்னறிவிப்பு
27-04-2025 மற்றும் 28-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
29-04-2025 முதல் 02-05-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
03-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தென்னிந்திய பகுதிகளின் வளிமண்டல கீழடுக்கு பகுதியில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்றுகள் சந்திக்கும் நிலைமை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இரவு வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.