‘வருங்கால முதல்வரே’… நயினாருக்காக அடிக்கப்பட்ட போஸ்டர்.. அதிமுக கூட்டணில் குழப்பம்?

திருநெல்வேலியில் 'வருங்கால முதல்வரே' என நயினார் நாகேந்திரனுக்கு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே, அதிமுக பாஜக கூட்டணிக்குள் பிரச்னை ஏற்பட்டு வரும் நிலையில், இந்த போஸ்டரால் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வருங்கால முதல்வரே... நயினாருக்காக அடிக்கப்பட்ட போஸ்டர்..  அதிமுக கூட்டணில் குழப்பம்?

நயினார் நாகேந்திரன்

Updated On: 

17 Apr 2025 12:53 PM

திருநெல்வேலி, ஏப்ரல் 17: திருநெல்வேலியில் ‘வருங்கால முதல்வரே’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு (nainar nagendran) ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில்,  அவருக்காக நெல்லையில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. செட்டிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அம்மா. எஸ். செல்வகுமார் பெயரில்  போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன.

‘வருங்கால முதல்வரே’…

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு ஒட்டப்பட்ட போஸ்டரால் அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்ற. திமுக தலைமையிலான கூட்டணிணை வீழ்த்தி ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என்பதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.

கடந்த 2024 லோக்சபா தேர்தலின்போது பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால், அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து, 2026 சட்டப்பேரவை தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி முனைப்பு காட்டினார்.

நயினாருக்காக அடிக்கப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

இந்த நிலையில், அதிமுக பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. மேலும், அதிமுக பாஜக கூட்டணி அமைத்து வெற்றி பெற்றால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் நடைபெறும் என அமித் ஷா கூறியிருக்கிறார்.  ஆனால், இதற்கு மறுத்த எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி தான்.. கூட்டணி ஆட்சி கிடையாது என்று திட்டவட்டமாக கூறினார்.

இதனால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. 2026 தேர்தலில் கூட்டணி வெற்றி பெற்றாலும், அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என்று கூறினார். இதே கருத்தை அதிமுக மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர்.  இந்த நிலையில், திருநெல்வேலியில்  ‘வருங்கால முதல்வரே’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருநெல்வேலியில் ‘வருங்கால முதல்வரே’ என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கூட்டணிக்குள் பிரச்னை நிலவி வரும் நிலையில், இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, அண்ணாமலை பாஜகவின் முகமாக அறியப்பட்டு வரும் நிலையில்,  தற்போது தமிழக பாஜக தலைமை மாற்றப்பட்டு, நயினார் அந்த பொறுப்புக்கு வந்த பிறகு, அவருக்கு முக்கியத்துவம்  அளிக்கப்பட்டு வருகிறது. இது  அண்ணாமலைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிது என்பது குறிப்பிடத்தக்கது.