Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

20 ஆண்டுகளுக்கு பின்.. சென்னை ஏர்போர்டில் வந்த மாற்றம்.. இனி ஈஸியா பயணிக்கலாம்!

Chenai Airport Bus Service : சென்னை விமான பயணிகளின் வசதிக்காக, விமான நிலையத்தில் இருந்து பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு விமான நிலையத்தில் இருந்து பேருந்து சேவை தொடங்கப்பட்டது. கிளாம்பாக்கம், ஓஎம்ஆர் வழியாக ஈசிஆர் சாலையில் உள்ள அக்கரைக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளுக்கு பின்.. சென்னை ஏர்போர்டில் வந்த மாற்றம்.. இனி ஈஸியா பயணிக்கலாம்!
சென்னை விமான நிலையத்தில் இருந்து பேருந்து சேவை
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 26 Apr 2025 07:26 AM

சென்னை, ஏப்ரல் 26:  சென்னை விமான நிலையத்தில் இருந்து பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை விமான  நிலையத்தில் இருந்து பேருந்து சேவையை  மாநகர போக்குவரத்து கழகம் தொடங்கியுள்ளது. இது வசதி விமான நிலைய பயணிகளுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் போக்குவரத்து சேவை என்பது பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.    சென்னை மாநகரில் உள்ள அனைத்து இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இது  சென்னை மக்களுக்கு பெரிதும் உதவுகிறது.

20 ஆண்டுகளுக்கு பிறகு வந்த மாற்றம்

சென்னையில் இருந்து புறநகருக்கு செல்வதற்கும் பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், சென்னையில் பல்வேறு  பேருந்துகளையும் போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்தி வருகிறது.  அண்மையில் கூட தாழ்தள பேருந்துகளையும் மாநகர போக்குவரத்து கழகம் அறிமுகம் செய்தது.

விரைவில் மினி பேருந்து சேவை, மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது முக்கிய ரூட்டில் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னை விமான நிலையத்தில் இருந்து பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை விமான  நிலையத்தில் இருந்து பேருந்து சேவையை  மாநகர போக்குவரத்து கழகம் தொடங்கியுள்ளது. இது பயணிகளிடையே பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.  மேலும், இந்த சேவை விமான நிலைய பயணிகளுக்கு பெரிதும் உதவும்.

விமான நிலையத்தில் இருந்து பேருந்து சேவை துவக்கம்


சென்னை விமான நிலையத்தில் நேரடி பேருந்துகள் எதுவும் இல்லாத நிலையில்,  தற்போது தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக, 1 கிலோ மீட்டருக்கு மேல் சென்று பேருந்தில் பயணிக்க வேண்டி இருந்தது. மேலும், டாக்ஸி, ஆட்டோ கட்டணங்களும் அதிகமாக இருக்கும்.

இதனால்,  விமான நிலையத்தில் பேருந்து சேவை தொடங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில்,  தற்போது தொடங்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பேருந்து சேவையை அமைச்சர் அன்பரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் முனையத்திற்கு ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் பேருந்து இயக்கப்படுகிறது. பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் உயிரியல் பூங்காவில் நின்று கிளாம்பாக்கத்தை அடையும். மேலும், சென்னை விமான நிலையத்தில் அக்கறைக்கு பேருந்து இயக்கப்படுகிறது. ரேடியல் சாலை, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நின்று அக்கரை சென்றடைகிறது. இந்த பேருந்து ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

 

மூத்த குடிமக்களுக்கான FD-க்கும் 9.10% வரை வட்டி வழங்கும் வங்கிகள்
மூத்த குடிமக்களுக்கான FD-க்கும் 9.10% வரை வட்டி வழங்கும் வங்கிகள்...
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி இதுவரை வசூல் செய்தது இவ்வளவா?
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி இதுவரை வசூல் செய்தது இவ்வளவா?...
விஜய் சேதுபதிக்கு வில்லனாகக் களமிறங்கும் மலையாள பிரபலம்?
விஜய் சேதுபதிக்கு வில்லனாகக் களமிறங்கும் மலையாள பிரபலம்?...
லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் என்னிடம் கதை கூறினார்- நானி!
லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் என்னிடம் கதை கூறினார்- நானி!...
'கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது'- முதல்வர் ஸ்டாலின் பேச்சு
'கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது'- முதல்வர் ஸ்டாலின் பேச்சு...
டிரிபிள் நெகட்டிவ் மார்பகப் புற்றுநோயில் மைக்ரோஆர்என்ஏவின் பங்கு!
டிரிபிள் நெகட்டிவ் மார்பகப் புற்றுநோயில் மைக்ரோஆர்என்ஏவின் பங்கு!...
செந்தில் பாலாஜிக்கு பதில் மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் ரகுபதி
செந்தில் பாலாஜிக்கு பதில் மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் ரகுபதி...
கோடையில் குளிர்ச்சியாக, ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
கோடையில் குளிர்ச்சியாக, ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?...
பஹல்காம் தாக்குதல்.. ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி முஸ்லீம்கள்
பஹல்காம் தாக்குதல்.. ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி முஸ்லீம்கள்...
கட்டாய வெற்றிக்காக காத்திருக்கும் KKR.. வாய்ப்பை பறிக்குமா PBKS?
கட்டாய வெற்றிக்காக காத்திருக்கும் KKR.. வாய்ப்பை பறிக்குமா PBKS?...
உங்கள் ஸ்மார்ட்போனில் அடிக்கடி Internet கோளாறு ஏற்படுகிறதா?
உங்கள் ஸ்மார்ட்போனில் அடிக்கடி Internet கோளாறு ஏற்படுகிறதா?...