2 வயது குழந்தை மது கொடுத்து அடித்து கொலை… தாய் செய்த கொடூரம்.. அதிர்ச்சி வாக்குமூலம்!

Tirunelveli Crime News : திருநெல்வேலியில் திருமணத்திற்கு மீறிய உறவில் இடையூறாக இருந்ததால், இரண்டரை வயது குழந்தையை தாய் கொலை செய்ததது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்கு மது குடித்து, அடித்தே கொலை செய்துள்ளனர். இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பராக தாய் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 வயது  குழந்தை மது கொடுத்து அடித்து கொலை...  தாய் செய்த கொடூரம்.. அதிர்ச்சி வாக்குமூலம்!

மாதிரிப்படம்

Updated On: 

26 Apr 2025 07:56 AM

திருநெல்வேலி, ஏப்ரல் 26: திருநெல்வேலியில் இரண்டரை வயது குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டரை வயது குழந்தைக்கு மது கொடுத்து அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக தாய் மற்றும் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மகாதேவன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயததனா பிருந்தா. இவரது கணவன் சரத். இவர் கோயம்புத்தூரில் வேலை செய்து வருகிறார்.

2 வயது குழந்தை மது கொடுத்து அடித்து கொலை

இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டவரை வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில், 2025 ஏப்ரல் 23ஆம் தேதி இரவு பிருந்தா, நடுவைக்குறிச்சியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று தனது மகள் திடீரென மயக்கமடைந்து இறந்துவிட்டதாக தாயிடம் கூறி இருக்கிறார்.

சிறுமியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ​​அவள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுமியின் கைகள் மற்றும் உதடுகளில் காயங்கள் இருந்ததால், மருத்துவர்கள் திசையன்விளை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அவர்கள் குழந்தையின் உடலை திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பிருந்தா மீது சந்தேகம் அடைந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிருந்தாவுக்கு சில இளைஞர்களுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தது தெரியவந்தது.

இதற்கு இடையூறகாக இருந்ததால் தனது குழந்தையை அடித்தே கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பிருந்தாவே போலீசாரிடம்  திடுக்கிடும் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.  அதன்படி, திசையன்விளை அருகே உள்ள துவாரம்பாடு பகுதியைச் சேர்ந்த லிங்க செல்வம் (26), முத்து சுடர் (25), பெஞ்சமின் (25) ஆகியோருடன் பிருந்தா திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்துள்ளார்.

தாய் செய்த கொடூரம்

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு பிருந்தாவின் வீட்டிற்கு மூன்று இளைஞர்களும் சென்றிருக்கின்றனர். அப்போது, பிருந்தாவையும் , இரண்டரை வயது குழந்தையும் வாழைத் தோப்புக்கு அழைத்து சென்றிருக்கின்றனர்.

குழந்தை அழுது கொண்டிருந்தபோது, ​​மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர்கள், குழந்தைக்கு மது கொடுத்து இருக்கின்றனர். குளிர்பானம் கலந்த மதுபானத்தை குழந்தையின் வாயில் ஊற்றி இருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, குழந்தை மயக்கமடைந்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, குழந்தையின் மூக்கை பொத்தியும், அடித்தும் கொலை செய்துள்ளனர். இதனால், உயிரிழந்த குழந்தையை அவர்கள் மூன்று பேரும் பிருந்தாவிடம் கொடுத்துவிட்டு தப்பிச் சென்றனர். இதை பார்த்துஎன்ன செய்வதன்று தெரியாமல், தனது குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டதாக பெற்றோரிடம் கூறி நாடமாடி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, போலீசார் பிருந்தா மற்றும் மூன்று இளைஞர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.