”வரம்பு மீறும் சேகர்பாபு” கடுப்பான பாஜக தலைகள்.. என்ன மேட்டர்?

Minister Sekar Babu : சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் கோயில் கோபுரம் போன்று மலர்களால் அலங்கரித்து அமைச்சர் சேகர்பாபு வணங்கியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதற்கு நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

”வரம்பு மீறும் சேகர்பாபு”  கடுப்பான பாஜக தலைகள்.. என்ன மேட்டர்?

அமைச்சர் சேகர்பாபு

Updated On: 

17 Apr 2025 13:50 PM

சென்னை, ஏப்ரல் 18:  சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் கோபுரம் போல்  மலர்களால் அலங்கரித்து அமைச்சர் சேகர்பாபு (Minister Sekar Babu) வணங்கியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதற்கு பாரதிய ஜனதாக கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாரதிய ஜனதாக கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

”வரம்பு மீறும் சேகர்பாபு”

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்,  2025 ஏப்ரல் 17ஆம் தேதியான இன்று அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இதனையொட்டி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் 2025 ஏப்ரல் 17ஆம் தேதியான இன்று மரியாதை செலுத்தினார்.

அந்த இடத்தில் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் கோபுரம் போல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இங்கு மரியாதை  செலுத்தி  அமைச்சர் சேகர்பாபு வணங்கினார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  சமூக வலைதளங்களில் சேகர்பாபுவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில்,  முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் சேகர்பாபுவுக்கு கண்டனம் தெரிவித்தார். அதில், “மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்து, தொழில் போட்டியில் வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு.

கடுப்பான பாஜக தலைகள்

 

கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவினர், காலகாலமாக இந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். தனது தொழில் போட்டிக்கு, இந்து சமய அறநிலையத் துறையைப் பயன்படுத்துவதை அமைச்சர் சேகர்பாபு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், “சமாதியின் மீது கோவில் கோபுரங்களை வரைந்து இந்துக் கோவில்களின் புனிதத்தையும் கெடுக்க வேண்டுமா?

அதுவும் இந்து அறநிலையத் துறை அமைச்சராக பதவியில் இருக்கும் சேகர்பாபு அவர்கள் இவ்வாறு இந்துக்களின் நம்பிக்கைகளை சீண்டிப்பார்க்கும் மனப்போக்குடன் செயல்பட்டமைக்கு அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். எச். ராஜா, அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட பல பாஜக தலைவர்களும் அமைச்சர் சேகர்பாபுவுக்கு கண்டம் தெரிவித்துள்ளனர்.