ராஜினாமா செய்யும் செந்தில் பாலாஜி? சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி செய்த சம்பவம்!

Minister Senthil Balaji : தமிழக சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜிக்கு பதிலாக அமைச்சர் ரகுபதி மசோதாவை தாக்கல் செய்தார். உயிரி மருத்துவக் கழிவுகள் தொடர்பான மசோதாவை செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய இருந்தது. ஆனால், அவருக்கு பதிலாக இந்த மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.

ராஜினாமா செய்யும் செந்தில் பாலாஜி? சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி செய்த சம்பவம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி - அமைச்சர் ரகுபதி

Updated On: 

26 Apr 2025 13:18 PM

சென்னை, ஏப்ரல் 26: தமிழக சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜிக்கு (Minister senthil Balaji) பதிலாக அமைச்சர் ரகுபதி (Minister Ragupathi) மசோதாவை தாக்கல் செய்தார். உயிரி மருத்துவக் கழிவுகள் தொடர்பான மசோதாவை செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய இருந்தது. ஆனால், அவருக்கு பதிலாக இந்த மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றம் உத்தரவை அடுத்து, செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவர் மசோதாவை தாக்கல் செய்யவில்லை.

ராஜினாமா செய்யும் செந்தில் பாலாஜி?

செந்தில் பாலாஜி பதவியை ராஜினாமா செய்தால் மசோதா மீது பதில் தர முடியாது என்பதால் அமைச்சர் ராகுல் தாக்கல் செய்ததாக தெரிகிறது. தமிழக அமைச்சரவை எப்போது வேண்டுமானாலும் மாற்றம் செய்யப்படலாம். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் 2023ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். ஜாமீனில் வெளியே வந்த மூன்றாவது நாளிலேயே அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இதற்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெவித்தது. இதனால், செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையை நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்த விசாரணையின்போது, அமைச்சர் பதவி வேண்டுமா..

சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி செய்த சம்பவம்

ஜாமீனில் வெளியே இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்து 2025 ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது. எனவே, செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிகிறது.

மேலும், தொடர் சர்ச்சையில் சிக்கி வரும் பொன்முடியும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இதனால், அமைச்சரவையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடக்கலாம். சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில், அமைச்சரவை மாற்றம் செய்யப்பவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

எனவே, மின்சாரத்துறையை கவனித்து வந்த செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யும் பட்சத்தில், அந்த பொறுப்புக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வரலாம் என கூறப்படுகிறது. மேலும், வனத்துறையை கவனித்து வந்த பொன்முடிக்கு பதிலாக ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன் அல்லது கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் வரலாம் என கூறப்படுகிறது.

மேலும், சில அமைச்சர்களுக்கு இலாக்காங்கள் மாற்றப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பு 2025 ஏப்ரல் 26ஆம் தேதியான இன்று மாலை அல்லது ஏப்ரல் 27ஆம் தேதியான நாளை வெளியாகலாம் என கூறப்படுகிறது.