மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

Mettur Dam: மேட்டூர் அணை 2025 ஜூன் 12ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால் திறக்கப்பட உள்ளது என்று நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத்ராம் சர்மா தெரிவித்தார். ரூ.20 கோடி மதிப்பில் நடைபெறும் பராமரிப்பு பணிகள், பாசன காலத்துக்கு முந்தைய 6 மாதங்களில் மட்டும் மேற்கொள்ளக்கூடியவை. பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன என்றார்.

மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும்..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

மேட்டூர் அணை ஜூன் 12 அன்று திறக்கப்படும்

Updated On: 

10 Apr 2025 12:16 PM

தமிழ்நாடு ஏப்ரல் 10: மேட்டூர் அணையை (Mettur Dam) 2025 ஜூன் 12 அன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister M.K. Stalin) திறக்க உள்ளதாக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத்ராம் சர்மா (Water Resources Department Additional Chief Secretary Mangatram Sharma)  தெரிவித்துள்ளார். அணையின் பராமரிப்பு, புனரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்ட அவர், தொடர்புடைய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். திருச்சி மண்டல பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ரூ.20 கோடி மதிப்பில் நடைபெறும் பணிகள், ஆண்டில் 6 மாதங்கள் மட்டுமே செய்யக்கூடியவை எனத் தெரிவித்தார். அணை திறப்பதற்கு முன் பணிகள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பிறகு மீண்டும் பாசன காலம் முடிந்து தொடரப்படும் எனவும் கூறினார். பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன என்றும், அணையின் நிலை சிறப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேட்டூர் அணை 2025 ஜூன் 12ஆம் தேதி திறப்பு

மேட்டூர் அணையை 2025 ஜூன் 12ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத்ராம் சர்மா தெரிவித்துள்ளார். 2025 ஏப்ரல் 10 இன்று காலை அவர் மேட்டூர் அணையை நேரில் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது, அணையின் வலது மற்றும் இடது கரை பகுதிகள், 16 கண் மதகு, ஆய்வு சுரங்கம் மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவரும் பகுதிகளை ஆய்வு செய்தார்.

மேல்நிலை மற்றும் கீழ்மட்ட மதகுகள், அணை மின்நிலையம் உள்ளிட்ட பகுதிகளும் பார்வையிடப்பட்டன. பின்னர், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தயாளகுமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.

மேட்டூர் அணையின் பராமரிப்பு பணிகள் தீவிரம்

பின் செய்தியாளர்களிடம் பேசிய மங்கத்ராம் சர்மா, மேட்டூர் அணையின் பராமரிப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், டெல்டா பகுதிக்கு நீர் திறப்பதற்கு முன்னதாக அணையின் நிலையை நேரில் ஆய்வு செய்யவே வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், ஜூன் 12ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து அணையை திறக்கும் வாய்ப்பு உள்ளதால், அதற்கு முந்தைய பராமரிப்பு பணிகளை முடிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அணை திறக்கப்பட்ட பின்னர் பணிகள் நிறுத்தப்படும்

மேலும், அணையில் தற்போது ரூ.20 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இவை பாசன காலத்தைப் பொருட்படுத்தி ஆண்டில் 6 மாதங்கள் மட்டுமே செய்யக்கூடிய பணிகள் என்பதால், முன்கூட்டியே தொடங்கி தற்போது இரு மாதமாக நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்தார். மேட்டூர் அணை திறக்கப்படும் முன் இந்தப் பணிகளை முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அணை திறக்கப்பட்ட பின்னர் பணிகள் நிறுத்தப்படும்; பாசன காலம் முடிந்த பிறகு மீண்டும் தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மேட்டூர் செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.