லாப, நட்டம் பார்க்காமல் திமுக கூட்டணியில் பயணிக்கிறோம்.. தொண்டர்களுக்கு வைகோ கடிதம்!
MDMK Leader Vaiko wrote letter to party members | வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தனது 31 ஆண்டு கால அரசியல் பயணத்தை தொடர்ந்து மே 6, 2025 அன்று 32வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில், அந்த கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை, ஏப்ரல் 28 : அரசியல் லாப, நஷ்டங்களை பார்க்காமல் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் (DMK – Dravida Munnetra Kazhagam) பயணிக்கிறோம் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக (MDMK – Marumalarchi Dravida Munnetra Kazhagam) பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 32வது ஆண்டு தொடக்கத்தையொட்டி கட்சி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வகையில் சார்பு அணிகள் திட்டமிட்டு செயல்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், வைகோ கட்சி தொண்டர்களுக்குன் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
32வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் றுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்
வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மே 6, 2025 முதல் தனது 32 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில் கடந்த 31 ஆண்டு கால அரசியல் பயணத்தையும், இனிவரும் காலங்களில் எப்படி பயணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அதில் மதிமுக தனது அரசியல் பயணத்தில் 31 ஆண்டுகளை கடந்து 32 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு திராவிட இயக்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய வரலாற்று தேவை எழுந்துள்ளது. தமிழகத்தில் இந்துத்துவ கும்பல் வேரறுக்கப்பட வேண்டும் என்று மதிமுக உறுதியாக முடிவெடுத்து திமுக தலைமையிலான கூட்டணியில் அரிசி லாப நட்டங்களை பார்க்காமல் பயணத்தை தொடர்கிறது என்று கூறியுள்ளார்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் வெற்ரி பெறுவோம் – வைகோ
2026 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அதேநேரம் கடந்த 31 ஆண்டுகளாக இல்லாத வகையில் கடந்த ஏப்ரல் 20, 2025 அன்று மதிமுக நிர்வாக குழுவில் உணர்ச்சி பிரவாகமாக நிகழ்வுகள் நடந்தேறினே. நீர் அடித்து நீர் விலகாது என்பதை கட்சி நிர்வாக குழு திட்டவட்டமாக பிரகடனம் செய்திருக்கிறது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிர்வாகிகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். முன்னதாக திமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெற்றால் அதனால் ஏற்படும் விளைவுகளையும் சந்திக்க தயார் என்று விசிக தலைவர் தொல். திருமாவளாவன் கூறியிருந்த நிலையில், தற்போது லாப நட்டங்களை பாராமல் திமுக கூட்டணியில் அங்கம் வகிப்பதாக வைகோ கூறியுள்ளது கவனம் பெற்றுள்ளது.