பதவியில் இருந்து விலகிய மகன்… மதிமுக நிர்வாக குழு கூட்டம்.. வைகோ எடுக்கும் முடிவு!

MDMK Durai Vaiko: துரை வைகோ கட்சி பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், 2025 ஏப்ரல் 20ஆம் தேதியான இன்று மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் துரை வைகோவும் கலந்து கொள்கிறார். எனவே, இந்த கூட்டத்தில் என்ன முடிவுகளை வைகோ எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பதவியில் இருந்து விலகிய மகன்... மதிமுக நிர்வாக குழு கூட்டம்.. வைகோ எடுக்கும் முடிவு!

வைகோ - துரை வைகோ

Updated On: 

20 Apr 2025 07:57 AM

சென்னை, ஏப்ரல் 20: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (MDMK Durai vaiko) முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகியுள்ளார். இந்த நிலையில், சென்னையில் 2025 ஏப்ரல் 20ஆம் தேதியான இன்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (MDMK) நிர்வாக குழு கூட்டம் நடைபெற உள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர்  வைகோ தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.  மகன் துரை வைகோ பதவியை துறந்த நிலையில், வைகோ என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மதிமுக நிர்வாக குழு கூட்டம்

துரை வைகோவுக்கு கட்சியில் பொறுப்பு கொடுத்த நாள் முதலே பிரச்னை ஏற்பட்டு வருகிறது. அதாவது, துரை வைகோ ஆதரவாளர்கள் மல்லை சத்யாவுக்கு எதிராக செய்லபட்டு வருவதாக தெரிகிறது. கட்சி நிகழ்ச்சிகளில் அவரது பெயரை பேனர் போஸ்டர்களில் பயன்படுத்தக் கூடுது என கட்டுப்பாடுகளும் போட்டப்பட்டதாக தெரிகிறது.

தொடர்ந்து இதுபோன்று நடந்து வந்ததால், துரை வைகவுக்கும், மல்லை சத்யாவுக்கும இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தற்போது அது மோதலாக மாறி, தற்போ உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. அண்மையில் கூட நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க கோரி துரை வைகோ ஆதரவாளர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

இதுபோன்ற தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது எனவு வைகோ அறிவுறுத்தினார். மேலும், வைகோவிற்கு பிறகு, துரை வைகோ தான் கூறி வருகின்றனர். தனக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கியதே வைகோ தான் என்றும் தான் அவருக்கு விசுவாகமாகவும், எப்போது நன்றி உள்ளவனாகவும் இருப்பேன் என்று மல்லை சத்யா கூறி இருக்கிறார்.

வைகோ எடுக்கப்போகும் முடிவு

இப்படி மதிமுகவில் ஏற்பட்டு இருக்கும் இந்த சலசலப்புக்கு இடையே மதிமுகவின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகியுள்ளார். அதே நேரத்தில் திருச்சி எம்.பியாக மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றுவேன் என்றும் கூறி உள்ளார். மேலும்,  இது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துரை வைகோவின் முடிவு தன்னை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக வைகோ கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த துரை வைகோ, “மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டுள்ளேன். என்னால் பிரச்னை வேண்டாம் என பார்க்கிறேன். கட்சிப் பதவியில் இருந்து விலகியது எனது தனிப்பட்ட முடிவு” என்று விளக்கம் அளித்தார். இந்த நிலையில், 2025 ஏப்ரல் 20ஆம் தேதியான இன்று சென்னை மதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு மதிமுக நிர்வாக குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் துரை வைகோவும் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் வைகோ என்ன மாதிரியான முடிவுகளை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே,  வைகோ, துரை வைகோ சமாதானம் படுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே,  இந்த கூட்டத்திற்கு பிறகு, துரை வைகோ மீண்டும் கட்சி பொறுப்பை ஏற்பாரா இல்லை என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.