Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பொன்முடிக்கு சிக்கல்.. அமைச்சர் பதவி பறிக்கப்படுமா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

தமிழக அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் குறித்து சைவம், வைணம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்ப்பட்டது.

பொன்முடிக்கு சிக்கல்.. அமைச்சர் பதவி பறிக்கப்படுமா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!
அமைச்சர் பொன்முடி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 24 Apr 2025 14:57 PM

சென்னை, ஏப்ரல் 24: தமிழக அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், முதல்வர் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை நீக்க வேண்டும் எனவும் மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளது. 2025 ஏப்ரல் 8ஆம் தேதி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் பெண்கள் குறித்து அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு பேசியிருந்தார்.

அமைச்சர் பதவி பறிக்கப்படுமா?

சைவம், வைணம் என குறிப்பிட்டு பெண்களை இழிவாக பொன்முடி பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், அவரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனிடையே பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின்போது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பொன்முடியின் சர்ச்சை பேச்சு சுட்டிக் காட்டி கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கு 2025 ஏப்ரல் 23ஆம் தேதி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு மற்றும் பொன்முடி தரப்பு வாதத்தை நீதிபதி கேட்டார். மேலும், பொன்முடி குறித்து காட்டமாக பேசியுள்ளார். அதாவது, “பொன்முடியின் கருத்துகள் சைவ, வைணவ சமயங்களை இழிபடுத்தும் வகையில்உ ள்ளது.

சைவ, வைணவ சமயங்கள தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை. வைச சமயத்தின் விபூதி பட்டையும், வைணவத்தின் நாமமும் புனிதமானது. புனிதமான பட்டை, நாமத்தை ஒப்பிட்டும், மத உணவுர்களை பாதிக்கும் வகையில் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார். ஆபாசம் மட்டுமல்ல.

தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

இரு சமயங்களை சேர்ந்தவர்களை புண்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அமைச்சராக உள்ளவர் என்பதால் பொன்முடிக்கு காவல்துறை சலுகை வழங்க முடியாது. பொன்முடிக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்காததது துரதிஷ்டவசமானது” என்று பேசியிருந்தார்.

மேலும், இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்ய பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமு சபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடி மீதான வழக்கு தொடர்பாக 2025 ஜூன் 5ஆம தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், வழக்கு தொடர்பாக மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனுவில், முதலமைச்சர் குறித்த கருத்துகளை நீக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை 2025 ஜூன் 19ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எனவே, பொன்முடியின் அமைச்சர் பதவிக்கு இது பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.  ஏற்கனவே கட்சி பதவியை பறிகொடுத்த பொன்முடிக்கு, இது மேலும் தலைவலியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தஞ்சை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து: மக்கள் அதிருப்தி!
தஞ்சை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து: மக்கள் அதிருப்தி!...
திருமண வாழ்க்கையில் 25 வருடங்களை நிறைவு செய்த அஜித் - ஷாலினி!
திருமண வாழ்க்கையில் 25 வருடங்களை நிறைவு செய்த அஜித் - ஷாலினி!...
சிம்லா ஒப்பந்தம் ரத்து - அதிரடி முடிவு எடுத்த பாகிஸ்தான்!
சிம்லா ஒப்பந்தம் ரத்து - அதிரடி முடிவு எடுத்த பாகிஸ்தான்!...
ஆன்மீகத்தில் பச்சை கற்பூரத்தின் முக்கியத்துவம்!
ஆன்மீகத்தில் பச்சை கற்பூரத்தின் முக்கியத்துவம்!...
சிந்து நதிநீரை நிறுத்திய இந்தியா - பாகிஸ்தான் எச்சரிக்கை!
சிந்து நதிநீரை நிறுத்திய இந்தியா - பாகிஸ்தான் எச்சரிக்கை!...
கிரெடிட் கார்டை அதிகமாக யூஸ் பண்றீங்களா? எப்படி தவிர்ப்பது?
கிரெடிட் கார்டை அதிகமாக யூஸ் பண்றீங்களா? எப்படி தவிர்ப்பது?...
கோலிவுட்டின் பிரபல இயக்குநரைப் பாராட்டிய நடிகர் நானி
கோலிவுட்டின் பிரபல இயக்குநரைப் பாராட்டிய நடிகர் நானி...
வெயில் காலத்தில் ஏசி ஏன் வெடிக்கின்றன..? தடுப்பது எப்படி..?
வெயில் காலத்தில் ஏசி ஏன் வெடிக்கின்றன..? தடுப்பது எப்படி..?...
தலைவலிக்கும் ஒற்றை தலைவலிக்கும் என்ன வித்தியாசம்..?
தலைவலிக்கும் ஒற்றை தலைவலிக்கும் என்ன வித்தியாசம்..?...
இந்தியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற பாகிஸ்தான் அரசு உத்தரவு!
இந்தியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற பாகிஸ்தான் அரசு உத்தரவு!...
சிம்புவின் STR 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்!
சிம்புவின் STR 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்!...