LPG Cylinder Price Hike: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு.. மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
Tamil Nadu Chief Minister MK Stalin: பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை தலா ரூ. 2 உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. இந்தநிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதற்கு மத்திய அரசிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஏப்ரல் 7: சமையல் எரிவாயு மற்றும் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய எண்ணெய் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி (Hardeep Singh Puri) 2025 ஏப்ரல் 7ம் தேதியான இன்று அறிவித்தார். இதில் மானிய விலை மற்றும் பொதுப் பிரிவு வாடிக்கையாளர்களுக்கு விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிலிண்டரின் புதிய விலைகள் நாளை அதாவது 2025 ஏப்ரல் 8ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை தலா ரூ. 2 உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. இந்தநிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதற்கு மத்திய அரசிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin) கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்:
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றம் குறித்து கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறிய கருத்துகள் பின்வருமாறு..
- இந்தியாவில் வாழும் மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா?
- மக்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும் என்பது, மத்தியில் ஆளும் பாஜக அரசிற்கு மிகவும் பொருந்தும்!
- உலக அளவில் கச்சா எண்ணெயின் விலையானது சரிந்துள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு இந்திய மக்களை தள்ளிவிட்டார்களே?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவு:
நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா?
“உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்” என்பது, #SadistBJP அரசுக்கு மிகவும் பொருந்தும்!
உலக அளவில் #CrudeOil விலை சரிந்துள்ள நிலையில், #Petrol #Diesel விலையைக்… pic.twitter.com/lLC1I2ejS3
— M.K.Stalin (@mkstalin) April 7, 2025
- வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு அமைந்திருக்கிறது.
- மக்களே… அடாவடியாக விலையை ஏற்றிவிட்டு, தேர்தல் நெருங்கும் காலக்கட்டத்தின்போது அதில் சிறிய அளவில் குறைத்து நாடகம் ஆடுவது ஆளும் பா.ஜ.க.வின் வழக்கமாகிவிட்டது! இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது!
- மத்திய பாஜக அரசே… தேர்தல் நேரம் வரும் வரை காத்திருக்காமல், இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக!
விலை உயர்வு எப்போது..?
எரிவாயு சிலிண்டர் விலை மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வானது 2025 ஏப்ரல் 8ம் தேதி முதல் அமலுக்கு வருகிறத். இந்த அதிகரிப்பிற்கு பிறகு, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 13 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 10 ஆகவும் அதிகரிக்கும். அதேநேரத்தில் எரிவாயு சிலிண்டர் விலை மாநிலங்களை பொறுத்து மாறுபடும்.