காவல் நிலையத்துக்குள் அழையா விருந்தாளியாக வந்த சிறுத்தை … அதிர்ச்சியில் உறைந்த போலீசார்

Leopard Enters Police Station in Naduvattam: நீலகிரி கூடலூர் நடுவட்டம் போலீஸ் நிலையத்தில் சிறுத்தை நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அறையில் சாப்பாடு இல்லையென பார்த்த சிறுத்தை வெளியே சென்றது; போலீஸ் ஏட்டு கதவு பூட்டி தப்பினார். வனத்துறையினர் சிறுத்தை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

காவல் நிலையத்துக்குள் அழையா விருந்தாளியாக வந்த சிறுத்தை ... அதிர்ச்சியில் உறைந்த போலீசார்

காவல் நிலையத்துக்குள் அலையா விருந்தாளியாக வந்த சிறுத்தை

Updated On: 

29 Apr 2025 10:01 AM

நீலகிரி ஏப்ரல் 29: நீலகிரி மாவட்டம் (Ooty) கூடலூர் – ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் (On the Gudalur – Ooty National Highway) நடுவட்டம் பஜாரில் போலீஸ் நிலையத்திற்குள் 2025 ஏப்ரல் 28-ஆம் தேதி நேற்றிரவு சிறுத்தை நுழைந்தது. சிறுத்தை இன்ஸ்பெக்டர் அறையை சுற்றி வந்தது; மற்றொரு அறையில் இருந்த போலீஸ் ஏட்டு அதிர்ச்சியில் உறைந்தார். அறையில் சாப்பாட்டில்லையென கண்ட சிறுத்தை வெளியே சென்றது. பின்னர் போலீஸ் ஏட்டு கதவை பூட்டி பாதுகாப்பு கொண்டார். உயர் அதிகாரிகளும் வனத்துறையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான சம்பவம் பொதுமக்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் நிலையத்திற்குள் சிறுத்தை

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நடுவட்டம் பகுதியில் போலீஸ் நிலையத்தில் சிறுத்தை நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஏப்ரல் 28 நேற்றிரவு 8.30 மணியளவில், கூடலூர் – ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நடுவட்டம் பஜாரில், இருட்டின் சும்மத்தில் புதர்களுக்குள் பதுங்கிய சிறுத்தை ஒன்று போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்தது. நுழைவாயில் அருகே வந்த சிறுத்தை, இன்ஸ்பெக்டர் அமர்ந்திருந்த அறையை சுற்றி வலம் வந்தது.

போலீஸ் ஏட்டு அதிர்ச்சி

அப்போது மற்றொரு அறையில் பணியில் இருந்த போலீஸ் ஏட்டு ஒருவர், அறைக்குள் சிறுத்தை நுழைந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். அச்சத்தில், எந்த சத்தத்தையும் எழுப்ப முடியாமல் அவரும் நிசப்தமாக இருந்தார்.

வந்த வழியே சென்ற சிறுத்தை

அறைக்குள் சாப்பிடுவதற்குரிய எதுவும் இல்லாததால், சிறுத்தை மீண்டும் வாசற்படிக்கட்டுகளில் இறங்கி, வந்த வழியே வெளியே சென்றது. இதனை கதவு வழியாக எட்டிப் பார்த்த போலீஸ் ஏட்டு, சிறுத்தை வெளியே சென்றதை உறுதி செய்ததும் உடனே நுழைவாயில் கதவை பூட்டி தன்னை பாதுகாத்தார்.

காவல் நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை

 

வனத்துறை தேடுதல் வேட்டை

இந்த சம்பவம் உடனே உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. நடுவட்டம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்க நடவடிக்கை எடுத்தனர். தற்போது, போலீசாரிடையே பரபரப்பும் பொதுமக்களிடையே பயமும் நிலவுகின்றன.

இந்த நிகழ்வு கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. இதை அறிந்த பொதுமக்கள் போலீஸ் நிலையம் அருகே திரண்டனர். சிறுத்தையை விரைவில் பிடிக்க கோரிக்கையும் எழுந்துள்ளது.

நீலகிரி நகருக்குள் உலா வரும் வன விலங்குகள்

நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகள் நகரப் பகுதிகளில் அடிக்கடி காணப்படுவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். ஊட்டி முக்கிய சந்தையில் அண்மையில் ஒரு கரடி நுழைந்து. கூடலூர் பஸ் நிலையம் அருகே இரவு நேரத்தில் யானை ஒன்று சுற்றித் திரிந்தது. போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. காவலர்களும் வனத்துறையினரும் யானையை வனத்துக்குள் விரட்டினர். மேட்டுப்பாளையம் அருகே புலி தடயங்கள் காணப்பட்டது.

பொதுமக்கள் கோரிக்கை

நகரப்பகுதிக்கு அடிக்கடி விலங்குகள் நுழைவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு முறைகள் ஏற்படுத்த வேண்டும் என்றும், வனத்துறையினர் அதிக கண்காணிப்பு நடைமுறை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.