166 பயணிகள்.. சென்னை விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு.. நடந்தது என்ன?
Chennai Airport Emergency Situation : சென்னையில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் சக்கரம் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விமானத்தில் பயணிகள் உட்பட 166 பேர் இருந்தனர். இந்த நிலையத்தில் விமானிகள் சாமர்த்தியமாக செயல்பட்டதால் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

சென்னை, ஏப்ரல் 2: சென்னை விமான நிலையத்தில் (Chennai Airport) ஏப்ரல் 26, 2025 அன்று சென்னை விமான நிலையத்திலிருந்து மும்பை (Mumbai) நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானம் ஓடும் பாதையில் சென்றுகொண்டிருந்த போது, திடீரென அதன் ஒரு டயர் வெடித்து சிதறியது. அந்த விமானத்தில் 158 பயணிகள் மற்றும் குழுவினரைச் சேர்த்து மொத்தம் 166 பேர் இருந்தனர். இந்த திடீர் சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், விமானி மிகுந்த சாமர்த்தியத்துடன் சூழ்நிலையை கட்டுப்படுத்தினார். விமானத்தை நேரடியாக பாதையில் நிறுத்தி, பெரும் விபத்து ஏற்படுவதை தடுத்தார். இதன் மூலம் விமானத்தில் பயணித்த அனைத்து 166 பேரின் உயிரும் பாதுகாக்கப்பட்டது. சிறிது நேரம் பரபரப்பாக இருந்த நிலையில், பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து நிலைமைக்கு கட்டுப்பாடு ஏற்படுத்தினர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இதே போல கடந்த மார்ச் 30, 2025 அன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து சென்னை நோக்கி வந்த வந்த விமானத்தின் டயர் வெடித்து ஏற்பட்டது. தரையிரங்குவதற்கு முன் டயரில் பிரச்னை இருப்பதை விமானி கண்டறிந்து சென்னை விமான நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் அந்த விமானம் பாதுகாப்பாக தரையிறங்க போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விசாரணையில் அந்த விமானத்தின் 2 வது டயர் வெடித்திருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
திருச்சி விமான நிலையத்தில் நடந்த திகில் சம்பவம்
கடந்த அக்டோபர் 11, 2024 அன்று 141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து சார்ஜா செல்ல வேண்டிய விமானத்தில் சக்கரங்களை உள்ளிழுக்கும் ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்க முடியாமல் 2 மணி நேரத்துக்கும் மேலாக வானில் வட்டமடித்தது. தொழில் நுட்ப வல்லுநர்கள் எவ்வளவு முயன்றும் பிர்சனையை சரி செய்ய முடியவில்லை. இதனால் திருச்சி விமான நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து அசம்பாவிதத்தை தவிர்க்க விமானத்தில் உள்ள பெட்ரோலை குறைக்கும் விதமாக திருச்சியை சுற்றி வானில் விமானம் வட்டமடித்தது. இதனால் விமானத்தில் உள்ள மக்கள் அச்சமடைந்தனர். மேலும் விமானத்தில் உள்ள பயணிகள் பதற்றத்துடன் திருச்சி விமான நிலையத்தில் குவிந்தனர். பாதுகாப்பு நடவடிக்கையாக திருச்சி விமான நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், 18 ஆம்புலன்ஸ்கள், 20க்கும் மேற்பட்ட டாக்டர்கள், 100க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் அடங்கிய குழுவினர் விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் செய்திகளில் பார்த்தவர்களுக்கு திரில்லர் படங்கலை பார்த்த அனுபவத்தை அளித்தது. இதனையடுத்து சரியாக 8.10 மணி அளவில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்ப்டடது. இதனையடுத்து பயணிகளை பாதுகாப்பாக தரையிறக்கிய விமானிகளுக்கு பாதுகாப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அக்டோபர் 12, 2025 அன்று அதிகாலையில் வேறு விமானத்தில் 144 பயணிகளும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.