பெண் தூய்மைப் பணியாளர் மீது காலணியால் தாக்குதல்… அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பரபரப்பு

Aruppukottai Government Hospital: விருதுநகர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர் உமா மகேஸ்வரி மீது ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர் ராஜ் காலணியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், 30க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் தூய்மைப் பணியாளர் மீது காலணியால் தாக்குதல்... அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பரபரப்பு

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் தாக்குதல்

Published: 

16 Apr 2025 07:21 AM

விருதுநகர் ஏப்ரல் 16: விருதுநகர் மாவட்டம் (Virudhunagar District) அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் (Aruppukottai Government Hospital) ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர் உமா மகேஸ்வரி (Sanitation Worker Uma Maheshwari) , 2025 ஏப்ரல் 15ஆம் தேதி வழக்கம்போல் எக்ஸ்ரே அறையில் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு பணியாற்றும் லேப் டெக்னீசியன் ராஜ் (Lab Technician Raj), காலணியை கழற்றி வைத்துச் சுத்தம் செய்யுமாறு கூறியதாகவும், இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை, தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் அமைந்துள்ள ஒரு முக்கிய அரசு மருத்துவமனை ஆகும். இது பொதுமக்களுக்கு இலவச சிகிச்சை மற்றும் மருத்துவ சேவைகளை வழங்குவதன் மூலம் மக்களின் நலனுக்காகச் செயல்படுகிறது. இந்த மருத்துவமனையில் பராமரிப்பு, சிகிச்சை, அறுவைசிகிச்சைகள் மற்றும் அவசர சேவைகள் போன்ற பல வகையான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.

அரசு மருத்துவமனை எக்ஸ்ரே அறையில் தகராறு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர் உமா மகேஸ்வரி, 2025 ஏப்ரல் 15ஆம் தேதி வழக்கம்போல் எக்ஸ்ரே அறையில் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு பணியாற்றும் ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர் ராஜ், காலணியை கழற்றி விட்டு சுத்தம் செய்யுமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

காலணியால் தாக்கியதாக குற்றச்சாட்டு

வாக்குவாதம் முற்றிய நிலையில், ராஜ் தனது காலணியால் உமா மகேஸ்வரியின் கையில் தாக்கினார் என தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த உமா மகேஸ்வரி, அழுது கொண்டு அறையிலிருந்து வெளியே வந்து சம்பவத்தை சக தூய்மைப் பணியாளர்களிடம் கூறினார்.

தூய்மைப் பணியாளர்களின் ஆத்திரம்

இதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த 30க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் திரண்டுவந்து, ராஜை அவரது அறையிலிருந்து வெளியே வந்தபோது சூழ்ந்து வைத்து சரமாரியாக தாக்கினர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது. பிற மருத்துவ ஊழியர்கள் தலையிட்டு ராஜை மீட்டு அழைத்துச் சென்றனர்.

தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

பெண் பணியாளர் மீது தாக்குதல் நடந்திருப்பதைக் கண்டித்து, அனைத்து தூய்மைப் பணியாளர்களும் தங்களது பணியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, எக்ஸ்ரே டெக்னீஷியன் ராஜ், காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் ராஜை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது, உமா மகேஸ்வரி காலணியுடன் எக்ஸ்ரே அறைக்குள் சென்றதை ராஜ் கண்டித்ததாகவும், அதனால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை அவசர நிலைகளில் சேவைகளை வழங்குவதுடன், சுகாதார சிக்கல்களை தீர்க்கவும், நோயாளிகளுக்கு முழு பராமரிப்பை வழங்கவும் திறமையாக செயல்படுகிறது