பங்குனி உத்திரத்தில் உட்சம் தொட்ட தேங்காய்.. ஏலத்தில் ரூ.52 ஆயிரம் போன அதிசயம்..!

Panguni Uttaram Festival: போடிநாயக்கனூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா விமரிசையாக நடந்தது. 2025 ஏப்ரல் 11 அன்று திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் வள்ளி தெய்வானையின் மாங்கல்யம் முன்பு வைக்கப்பட்ட தேங்காய் ரூ.52,000க்கு ஏலம் போனது.

பங்குனி உத்திரத்தில் உட்சம் தொட்ட தேங்காய்.. ஏலத்தில் ரூ.52 ஆயிரம் போன அதிசயம்..!

ரூ.52 ஆயிரத்துக்கு ஏலம் போன தேங்காய்

Updated On: 

11 Apr 2025 19:08 PM

போடிநாயக்கனூர் ஏப்ரல் 11: தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் (Subramania Swamy Temple) பங்குனி உத்திரத் திருவிழா (Panguni Uttaram Festival)  மிக விமரிசையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடைபெறும் இந்த விழா, முருக பக்தர்களுக்கிடையே பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இவ்விழா கடந்த 2025 ஏப்ரல் 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக தினந்தோறும் முருகப்பெருமானுக்கு விசேஷ அபிஷேகங்கள், அலங்கார பூஜைகள், மற்றும் நகர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர். பங்குனி உத்திர நாளை முன்னிட்டு திருக்கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் உள்ளிட்ட பல சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்த நிலையில் திருக்கல்யாண நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, தெய்வானி மற்றும் வள்ளியின் மாங்கல்யத்தைச் சுற்றி வைத்த தேங்காய் எப்போதும் ஏலம் விடுவது வழக்கம். இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை (Hindu Religious Endowments Department) சார்பில் அந்த தேங்காய் ஏலமாக வைக்கப்பட்டது. அந்த தேங்காய் 52 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அமைந்துள்ள அரிய வழிபாட்டு மையமாக விளங்கும் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா எப்போதும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் திருவிழா கடந்த 2025 ஏப்ரல் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் முழு சிறப்புடன் தொடங்கியது. தினந்தோறும் முருகப்பெருமானுக்கு 18 வகையான அபிஷேகங்கள், ஆராதனை, ஊர்வலம் போன்ற வழிபாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ‘திருக்கல்யாண வைபவம்’

திருவிழாவின் பத்தாவது நாளான இன்று 2025 ஏப்ரல் 11 கோயில் வளாகத்தில் மிக முக்கியமான நிகழ்வாக ‘திருக்கல்யாண வைபவம்’ நடைபெற்றது. இதில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை உடனான திருக்கல்யாண நிகழ்ச்சி ஆனந்த மழையுடன் நடந்தது. இதில் கோயில் தலைமைக் குழுவினரும், சோமஸ் கந்த குருக்கள் வீட்டின் பெண் வீட்டார் சார்பிலும் அழைப்பு நடைபெற்றது.

மாங்கல்யத்தைச் சுற்றி வைத்த தேங்காய் ரூ.52,000க்கு ஏலம்

திருக்கல்யாண நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, தெய்வானி மற்றும் வள்ளியின் மாங்கல்யத்தைச் சுற்றி வைத்த தேங்காய் எப்போதும் ஏலம் விடுவது வழக்கம். இந்த ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அந்த தேங்காய் ஏலமாக வைக்கப்பட்டது. ஏலத்தில் கலந்து கொண்ட பழனி ஆண்டவர் மற்றும் நாகஜோதி தம்பதியினர், அந்த தேங்காயை ரூ.52,000க்கு வென்றனர். அவர்களுக்குப் பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோயில் அறங்காவலரும் அறநிலையத் துறை அதிகாரிகளும் தேங்காயை வழங்கினர்.

இதையடுத்து, கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்த திருமண விருந்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவைமிகு உணவுகளை அனுபவித்தனர். இந்த திருக்கல்யாண வைபவம் பக்தர்களிடையே ஆனந்தத்தையும், பக்தி பரவசத்தையும் ஏற்படுத்தியது.