Chennai Weather: குளுகுளு கிளைமேட்.. சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டும் மழை!
Chennai Rains : சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ஆலந்தூர், எழும்பூர், வடபழனி, தேனாம்பேட்டை, ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

சென்னை, ஏப்ரல் 16: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் பலத்த மழை (Chennai Weather) பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ஆலந்தூர், எழும்பூர், வடபழனி, தேனாம்பேட்டை, ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், சென்னை புறநகரில் இடியுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் மூன்று நேரத்திற்கு தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது.
குளுகுளு கிளைமேட்
சென்னையிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவையின்று வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் காலை முதலே மேகமூட்டமாக இருந்தது. அதன்பிறகு திடீரென மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. எழும்பூர், தேனாம்பேட்டை, ஆலந்தூர், வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், ஆயிரம் விளக்கு, கிண்டி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இதனால் சென்னை முழுவதுமே குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது கிளைமேட் குளுகுளு என்று இருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் சென்னை புறநகரான தாம்பரம், பெருங்களுத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டும் மழை
Moderate to severe Thunderstorms with moderate to intense rain spells likely to continue for about an hour over Chennai and neighbourhood pic.twitter.com/mOIuOx0grF
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) April 16, 2025
மேலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த மழை அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஈரோடு, சேலம், தருமபுரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், 2025 ஏப்ரல் 16ஆம் தேதியான இன்று முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை தமிழக்ததில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.