நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த மீன்பிடி தடைக்காலம்.. எகிரப்போகும் மீன்களின் விலை!

Fishing ban started from 14 April 2025 | தமிழ்நாட்டில் ஏப்ரல் 15, 2025 முதல் ஜூன் 14, 2025 வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும் எனவும் இதன் காரணமாக ஏப்ரல் 14, 2025 நள்ளிரவு 12 மணிக்குள் கடலுக்குள் சென்ற அனைத்து படகுகளும் கரை திரும்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கடலுக்குள் சென்ற படகுகள் கரை திரும்பின.

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த மீன்பிடி தடைக்காலம்.. எகிரப்போகும் மீன்களின் விலை!

மீன்பிடி தடைக்காலம் அமல்

Published: 

14 Apr 2025 08:54 AM

சென்னை, ஏப்ரல் 14 : தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 14, 2025) முதல் மீன்பிடி தடைக்காலம் (Fishing Ban) அமலுக்கு வந்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள இந்த மீன்பிடி தடைக்காலம் அடுத்த 61 நாட்களுக்கு அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேல் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும் என்பதால், மீன்விலை உயருவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் எப்போது நிறைவு பெறும், இந்த தடைக்காலத்தின் போது மீன்களின் விலை எவ்வளவு உயர வாய்ப்புள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் அமல்படுத்தப்படும் மீன்பிடி தடைக்காலம்

தமிழகத்தை பொருத்தவரை சென்னை, புதுச்சேரி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் கடல் அமைந்துள்ளது. அதுமட்டுமனறி இந்த பகுதிகளில் துறைமுகங்கள் அமைக்கப்பட்டு, மீன் பிடிக்கும் தொழிலும் நடைபெற்று வருகிறது. இந்த துறைமுகங்கள் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இந்தியா உள்ளிட்ட மற்ற பிற பகுதிகளுக்கும் மீன்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த துறைமுகங்கள் மூலம் ஆண்டுதோறும் மீன் பிடிக்கப்படும் நிலையில், ஆண்டுக்கு சில குறிப்பிட்ட நாட்கள் மீன் பிடிக்க தடை விதிகப்படுகிறது.

மீன்கள் உள்ளிட்ட கட்ல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தை பாதுகாக்கவும், மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த மீன்பிடி தடைக்காலத்தில் போது மீன்பிடி படகுகள் கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. இதன் காரணமாக, இந்த மீன்பிடி தடைக்காலத்தின் போது மீன்களின் விலையும் உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

மீன்பிடி தடைக்காலம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த மீன்பிடி தடைக்காலம்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும் நிலையில், இந்த ஆண்டும் ஏப்ரல் 15, 2025 முதல் ஜூன் 14, 2025 வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தின் போது மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருவதற்கு முன்னதாக கடலுக்குள் சென்றுள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் இன்று (ஏப்ரல் 14, 2025) நள்ளிரவு 12 மணிக்குள், கரைக்கு திரும்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, கடலுக்குள் சென்ற படகுகள் கரை திரும்பிய நிலையில், மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.