Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உயரும் உப்பு விலை? உப்பு உற்பத்தி பாதிப்பு.. தூத்துக்குடிக்கே இந்த நிலையா?

Thoothukudi Salt Production: தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வானிலை காரணமாக உப்பு உற்பத்தில் தூத்துக்குடியில் 60 சதவீதம் வரை சரிந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால், வரலாற்றிலேயே முதல்முறையாக உள்நாட்டு தேவைக்காக உப்பு குஜராத்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது.

உயரும் உப்பு விலை? உப்பு உற்பத்தி பாதிப்பு.. தூத்துக்குடிக்கே இந்த நிலையா?
தூத்துக்குடி உப்பு உற்பத்தி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 20 Apr 2025 07:51 AM

தூத்துக்குடி, ஏப்ரல் 20: தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியில் (Thoothukudi Salt Production) பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வராற்றிலேயே முதல்முறையாக, வெளிமாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மீன் பிடித்தல், விவசாயம் போன்ற தொழிலுக்கு அடுத்தப்படியாக உப்பு உற்பத்தி பரவலாக நடந்து வருகிறது. உப்புத் தொழிலில் தமிழ்நாட்டின் மணிமகுடமாக தூத்துக்குடி திகழ்கிறது.

தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடியில் வேம்பார் பகுதியில் இருந்து ஆறுமுகநேரி வரை கடற்கரை பகுதியில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. நாட்டிலேயே குஜராத்திற்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் தூத்துக்குடியில் தான் உப்பு உற்பத்தி அதிகமாக செய்யப்படுகிறது.

ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.  உப்பு உற்பத்திக்கான பணிகள் ஜனவரி மாதம் தொடங்கும். இது செப்டம்பர் மாதம் உப்பு உற்பத்தி நடைபெறும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே உப்பு உற்பத்தி பணிகள் முடிவடைந்துவிடும்.

இந்த உப்பு உற்பத்தியில் பணியில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.   இந்த நிலையில்,  வரலாற்றிலேயே முதல்முறையாக தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்பட்டு, குஜராத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது.

எவ்வளவு உற்பத்தில் பற்றாக்குறை ஏற்பட்டாலும், உப்பு எங்கிருக்கும் இறக்குமதி செய்யப்படவில்லை. ஆனால், 2025ஆம் ஆண்டு முதல்முறையாக உற்பத்தி சீசன் தொடக்கத்திலேயே, குஜராத்தில் இருந்து உப்பு இறக்குமதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், உப்பின் விலை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

உயரும் உப்பு விலை?

வரலாற்றில் முதல் முறையாக குஜராத்திலிருந்து 40,000 டன் உப்பு குஜராத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி 60 சதவீத குறைந்துள்ளதால், குஜராத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பின் அளவு மேலும் அதிகரிக்கும் என தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

குஜராத்தில் இருந்து 40,000 டன் உப்பு கடந்த வாரம் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை அடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். பருவநிலை மாற்றம் காரணமாக தூத்துக்குடியில் மழைப்பொழிவு மாறிவிட்டதாகவும், உப்பு உற்பத்தியின் முக்கிய பருவம் தற்போது சீர்குலைந்துள்ளதாகவும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

இதனால், தூத்துக்குடியிலிருந்து பிற நாடுகளுக்கு உப்பு ஏற்றுமதி செய்வதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். உப்பு உற்பத்தி வீழ்ச்சியால், உப்பின் விலை உயர்ந்துள்ளது. ஒரு டன் உப்பின் விலை ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இது வழக்கத்தை விட மிக அதிகமான விலை என்று உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.  உற்பத்திச் செலவு டன்னுக்கு ரூ.2,000 முதல் ரூ.2,500 வரை இருந்தால் மட்டுமே மாவட்டத்தின் உப்புத் தொழிலை மீண்டும் தொடங்க முடியும் என்றும் உற்பத்தியாளர் கூறுகின்றனர்.

திருச்சி: கட்டிலில் படுத்திருந்த மகனை எரித்துக்கொன்ற தாய்..
திருச்சி: கட்டிலில் படுத்திருந்த மகனை எரித்துக்கொன்ற தாய்.....
சரியான தர்பூசணியை தேர்ந்தெடுப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!
சரியான தர்பூசணியை தேர்ந்தெடுப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!...
ஒரே நாளில் மோதும் சுந்தர் சி மற்றும் மிர்ச்சி சிவாவின் படங்கள்...
ஒரே நாளில் மோதும் சுந்தர் சி மற்றும் மிர்ச்சி சிவாவின் படங்கள்......
பல கோடிகளுக்கு ஜன நாயகன் பட தமிழக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்?
பல கோடிகளுக்கு ஜன நாயகன் பட தமிழக உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்?...
அட்சய திரிதியை நாளில் கல் உப்பு வாங்க மறக்காதீங்க!
அட்சய திரிதியை நாளில் கல் உப்பு வாங்க மறக்காதீங்க!...
சம்மரில் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - எப்படி தவிர்ப்பது?
சம்மரில் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் - எப்படி தவிர்ப்பது?...
10ம் வகுப்பு தேர்வில் குழப்பம்! அட்டெண்ட் செய்திருந்தால் மார்க்!
10ம் வகுப்பு தேர்வில் குழப்பம்! அட்டெண்ட் செய்திருந்தால் மார்க்!...
அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்?
அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்?...
வாரத்தின் 7 நாட்கள்.. எந்த நாளில் எந்த கடவுளை வணங்கினால் சிறப்பு?
வாரத்தின் 7 நாட்கள்.. எந்த நாளில் எந்த கடவுளை வணங்கினால் சிறப்பு?...
பிளே ஆஃப் இல்லையா? அடுத்த ஆண்டு இதுதான் திட்டம் - எம்.எஸ் தோனி
பிளே ஆஃப் இல்லையா? அடுத்த ஆண்டு இதுதான் திட்டம் - எம்.எஸ் தோனி...
ரவி மோகனின் இளமையின் ரகசியம் இதுதானா? அவரே கொடுத்த டிப்ஸ்!
ரவி மோகனின் இளமையின் ரகசியம் இதுதானா? அவரே கொடுத்த டிப்ஸ்!...