Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சேலம்: திருவிழா நேரத்தில் நேர்ந்த துயரம்… பட்டாசு வெடித்து ஏற்பட்ட உயிரிழப்பு

Fireworks Explosion: சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவின் போது பட்டாசு வெடித்து 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பைக்கில் கொண்டு செல்லும் போது பட்டாசு வெடித்து, உடல் சிதறி உயிரிழந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்: திருவிழா நேரத்தில் நேர்ந்த துயரம்… பட்டாசு வெடித்து ஏற்பட்ட உயிரிழப்பு
பட்டாசு வெடித்து மூவர் உடல் சிதறி பலி Image Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Updated On: 26 Apr 2025 07:27 AM

சேலம் ஏப்ரல் 26: சேலம் மாவட்டம், காடையாம்பட்டி (Salem District, Kadaiyampatti) அருகே திரௌபதி அம்மன் கோயிலில் (Draupadi Amman temple) நடைபெற்று வந்த திருவிழாவின் போது பட்டாசு திடீரென வெடித்து 4 பேர் (Three people killed fireworks explode during festival)  உயிரிழந்தனர். கோயிலுக்கு அருகிலிருந்தவர்களால் பட்டாசு வாங்கி கொண்டு வரப்பட்டது. அப்போது பட்டாசு வெடித்ததில் 4 பேர் பலியானார்கள். சம்பவம் தொடர்பாக போலீசார் விரைந்து வந்து 4 பேரின் உடல் சிதறியுள்ளதாக உறுதிபடுத்தினார்கள். இந்த விபத்து பூசாரிப்பட்டி பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கான சீர்வரிசை செல்லும் போது ஏற்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம்: திருவிழா சமயத்தில் பட்டாசு வெடித்து 4 பேர் உயிரிழப்பு

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவுக்கான பகுதி மக்கள் வெடிக்கப் பட்டாசுகளை கொண்டு வருவதற்காக ஏற்பாடு செய்திருந்தனர். கோவில் திருவிழாவில் வெடிக்க பட்டாசு மூட்டை பைக்கில் கொண்டு செல்லும் போது, சாலையோரத்தில் எரிந்து கொண்டிருந்த குப்பை தீயில் அந்த பைக் சாய்ந்தது. இதன் மூலம் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு, சிறுவர்கள் உட்பட மூன்று பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

கொண்டு செல்லும் போது வெடித்த பட்டாசு

திருவிழா சமயத்தில், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பட்டாசு வாங்கி வானவேடிக்கை காட்ட திட்டமிட்டு மோட்டார் சைக்கிளில் சென்று வாங்கி வருகிறார்கள். அந்த இடத்தில், பட்டாசு திடீரென வெடித்து, பலத்த சத்தம் கேட்டது. இதனால் பட்டாசு வாங்கியவர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர். குறுகிய நேரத்தில் அவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் உடல் சிதறி மூவர் உயிரிழந்ததகாக தெரிகிறது.

போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்த சம்பவத்தை கிராம மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். சம்பவ இடத்தில் 4 பேரின் உடல் சிதறி காணப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டாசு விபத்து மற்றும் உயிரிழப்பு

முதற்கட்ட விசாரணையில், சுவாமி திருக்கல்யாணத்திற்காக பூசாரிப்பட்டி பகுதியில் இருந்து திருமண சீர்வரிசை எடுத்துக் கொண்டபோது பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக 4 பேர் பலியானதாக போலீசார் கூறுகின்றனர். மேலும் சிலர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழப்பு மற்றும் யார் யாருக்கு காயம்?

மேலும், அங்கு விளையாடிக் கொண்டிருந்த கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த சுப்ரமணி மகன் கார்த்திக் (11) மற்றும் குருவாலியூரை சேர்ந்த சேட்டு மகன் தமிழ்செல்வன் (12) ஆகியோரும் அந்த வெடிப்பில் உடல் சிதறி உயிரிழந்தனர். அந்த பகுதியில் உள்ள சில வீடுகளின் கண்ணாடிகள், சுவர்கள் சேதமடைந்தன. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாகி இருந்தது.

காயமடைந்த லோகேஷ் (23) என்பவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார் விசாரித்து வருகிறார்.

கிராமத்தில் உளைச்சல் மற்றும் சோக நிலை

இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பஹல்காம் தாக்குதல்.. ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி முஸ்லீம்கள்
பஹல்காம் தாக்குதல்.. ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி முஸ்லீம்கள்...
கட்டாய வெற்றிக்காக காத்திருக்கும் KKR.. வாய்ப்பை பறிக்குமா PBKS?
கட்டாய வெற்றிக்காக காத்திருக்கும் KKR.. வாய்ப்பை பறிக்குமா PBKS?...
உங்கள் ஸ்மார்ட்போனில் அடிக்கடி Internet கோளாறு ஏற்படுகிறதா?
உங்கள் ஸ்மார்ட்போனில் அடிக்கடி Internet கோளாறு ஏற்படுகிறதா?...
நாயை இரண்டாவது மாடியிலிருந்து தூக்கி எறிந்து கொன்ற மருத்துவர்...
நாயை இரண்டாவது மாடியிலிருந்து தூக்கி எறிந்து கொன்ற மருத்துவர்......
மதுரை மக்களுக்கு உற்சாக அறிவிப்பு.. இப்படி மாறும் டெம்பிள் சிட்டி
மதுரை மக்களுக்கு உற்சாக அறிவிப்பு.. இப்படி மாறும் டெம்பிள் சிட்டி...
விஜய் வருகை... கோவை ஏர்போட்டில் குவிந்த த.வெ.க தொண்டர்கள்!
விஜய் வருகை... கோவை ஏர்போட்டில் குவிந்த த.வெ.க தொண்டர்கள்!...
பயங்கர குண்டுவெடிப்பு.. 10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!
பயங்கர குண்டுவெடிப்பு.. 10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!...
தமிழகத்தில் மீண்டும் வருகிறதா தாலிக்கு தங்கம் திட்டம்..?
தமிழகத்தில் மீண்டும் வருகிறதா தாலிக்கு தங்கம் திட்டம்..?...
திருச்சி ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா கோலாகலம்...
திருச்சி ஸ்ரீரங்கம் சித்திரை தேர் திருவிழா கோலாகலம்......
கனவிலும் நினைக்க முடியாத தண்டனை வழங்கப்பட வேண்டும் - ரஜினிகாந்த்!
கனவிலும் நினைக்க முடியாத தண்டனை வழங்கப்பட வேண்டும் - ரஜினிகாந்த்!...
நேஷ்னல் ஹரால்டு வழக்கு.. டெல்லி நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
நேஷ்னல் ஹரால்டு வழக்கு.. டெல்லி நீதிமன்றம் முக்கிய உத்தரவு!...