Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அதிகாலையில் பயங்கரம்: வெடிகளை பதுக்கி வைத்திருந்த பட்டாசு குடோனில் வெடி விபத்து

Firecracker Explosion Near Sattur: விருதுநகர் மாவட்டம் முத்தாண்டியாபுரத்தில் அனுமதியின்றி பதுக்கப்பட்ட பட்டாசுகள் இன்று 2025 ஏப்ரல் 30 அதிகாலை வெடித்தன. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்; உயிரிழப்பு இல்லை என முதற்கட்ட தகவல். போலீசும் வருவாய்த் துறையும் விசாரணை நடத்தி வருகின்றன.

அதிகாலையில் பயங்கரம்: வெடிகளை பதுக்கி வைத்திருந்த பட்டாசு குடோனில் வெடி விபத்து
வெடிகளை பதுக்கி வைத்திருந்த பட்டாசு குடோனில் வெடி விபத்துImage Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 30 Apr 2025 08:55 AM

விருதுநகர் ஏப்ரல் 30: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் (Virudunagar District Sattur) அருகே முத்தாண்டியாபுரம் கிராமத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் 2025 ஏப்ரல் 30 இன்று அதிகாலை வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் (Fire Department) விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசும் வருவாய்த் துறையும் விசாரணை நடத்தி வருகின்றனர். நல்வாய்ப்பாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கப்பட்ட விவகாரம் தற்போது முக்கிய விசாரணையாக மாறியுள்ளது.

சாத்தூரில் பட்டாசு குடோனில் வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள முத்தாண்டியாபுரம் கிராமத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பட்டாசு குடோனில் 2025 ஏப்ரல் 30 இன்று அதிகாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. சட்டவிரோதமாக அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் ஒருபின் ஒருபின் வெடிக்கத் தொடங்கின. இதில் தீ விபத்து ஏற்பட்டது. வெடிகளின் சத்தம் மற்றும் ஏற்படுத்திய அச்சத்தால் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

தீயணைப்பு, மீட்பு பணிகள் தீவிரம்

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வெம்பக்கோட்டை தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தற்போது தீயணைப்பு பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. அப்பகுதியை கரும்புகை சூழ்ந்திருப்பதால், மீட்புப் பணிகளில் சவால்கள் ஏற்பட்டுள்ளன.

பட்டாசு குடோனில் வெடி விபத்து-முதற்கட்ட விசாரணை

முதற்கட்ட தகவலின்படி, சம்பவம் நடந்த போது குடோனில் யாரும் பணியில் இல்லை என்பதால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. எனினும், இது போன்ற சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கி வைப்பது தொடரும் நிலையில், இத்தகைய விபத்துகள் மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது போலீசார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் வெடி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டாசு நகர் – தொடரும் விபத்துகள்

விருதுநகர் மாவட்டம், குறிப்பாக சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பட்டாசு தயாரிப்பில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இங்கு நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இத்துறையில் பல்லாயிரக்கணக்கானோர் வேலை செய்து வருகிறார்கள். எனினும், அனுமதி இன்றி வைக்கப்படும் வெடிகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வழக்கமாகி விட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் தருமபுரி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்ததில் அங்கு பணியாற்றிய மூன்று பெண்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை பாதுகாப்பு நெறிமுறைகள் மீறப்படுவதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. அதிகாரிகள் மேற்கொள்ளும் விசாரணை முடிவுகளை மக்களும் எதிர்நோக்கி வருகின்றனர்.

"இனி இப்படியெல்லாம் செய்யாதீங்க" தொண்டர்களுக்கு விஜய் அட்வைஸ்
மே மாதத்தில் 2 சனிப்பிரதோஷம்.. எப்போது தெரியுமா?
மே மாதத்தில் 2 சனிப்பிரதோஷம்.. எப்போது தெரியுமா?...
ஐபிஎல்லில் மீண்டும் சர்ச்சை! ரிங்கு சிங்குவை பளார் விட்ட குல்தீப்
ஐபிஎல்லில் மீண்டும் சர்ச்சை! ரிங்கு சிங்குவை பளார் விட்ட குல்தீப்...
கடலுக்குள் நடனம்... சென்னையை சேர்ந்த சிறுவன், சிறுமி அசத்தல்
கடலுக்குள் நடனம்... சென்னையை சேர்ந்த சிறுவன், சிறுமி அசத்தல்...
தேமுதிக இளைஞரணி செயலாளரானார் விஜய பிரபாகரன்
தேமுதிக இளைஞரணி செயலாளரானார் விஜய பிரபாகரன்...
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அப்டேட் இதோ
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அப்டேட் இதோ...
அடுத்த போப் ஆண்டவராகும் டிரம்ப்? அவரே சொன்ன முக்கியம் விஷயம்!
அடுத்த போப் ஆண்டவராகும் டிரம்ப்? அவரே சொன்ன முக்கியம் விஷயம்!...
தமிழக அங்கன்வாடிகளில் உணவு தரம் கேள்விக்குறி..? அறிக்கை வெளியீடு
தமிழக அங்கன்வாடிகளில் உணவு தரம் கேள்விக்குறி..? அறிக்கை வெளியீடு...
36 மணி நேரத்திற்குள் இந்தியா தாக்குதல்.. கதிகலங்கும் பாகிஸ்தான்!
36 மணி நேரத்திற்குள் இந்தியா தாக்குதல்.. கதிகலங்கும் பாகிஸ்தான்!...
அதிகாலையில் சாத்தூரில் பட்டாசு குடோனில் வெடி விபத்து
அதிகாலையில் சாத்தூரில் பட்டாசு குடோனில் வெடி விபத்து...
அட்சய திருதியை 2025 : தங்கம், வெள்ளியில் என்ன வாங்கலாம்?
அட்சய திருதியை 2025 : தங்கம், வெள்ளியில் என்ன வாங்கலாம்?...