பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரானார் அண்ணாமலை.. யார் யாருக்கு என்ன பொறுப்பு!
Nainar Nagendran as BJP State President | பாஜகவின் புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 11ம் தேதி நடைபெற்ற வேட்புமனு தாக்கலில் அவர் மட்டுமே மனு தாக்கல் செய்த நிலையில், இன்று (ஏப்ரல் 12, 2025) பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் மேலும் சிலருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை
சென்னை, ஏப்ரல் 12 : பாரதிய ஜனதா கட்சியின் (BJP – Bharatiya Janata Party) புதிய மாநில தலைவருக்கான தேர்தல் இன்று (ஏப்ரல் 11, 2025) நடைபெறும் என கட்சி தலைமை அறிவித்திருந்த நிலையில், நேற்று நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் நயினார் நாகேந்திரனை தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், நயினார் நாகேந்திரன் இன்று (ஏப்ரல் 12, 2025) நடைபெற்ற நிகழ்வில் புதிய மாநில தலைவராக பதவியேற்றார். இந்த நிலையில், அந்த கட்சியில் அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், யார் யாருக்கு என்ன பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
புதிய மாநில தலைவராக பதவி ஏற்றார் நயினார் நாகேந்திரன்
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி வகித்து வந்த நிலையில், அவரை மாற்றம் செய்வதற்காக பாஜக திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது. அதனை உறுதி செய்யும் விதமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாட்கள் பயணமாக சென்னை வந்திருந்தார். இதன் காரணமாக தமிழக பாஜகவில் முக்கிய மாற்றம் நிகழ உள்ளதாக அனைவரது கவனமும் பாஜகவின் பக்கம் திரும்பியது. இதற்கிடையே தமிழ்நாடு பாஜக தலைவர் தேர்தல் ஏப்ரல் 12, 2025 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அண்ணாமலை எக்ஸ் பதிவு
It is with immense happiness, in the esteemed presence of Hon Minister of Mines and @BJP4TamilNadu Election In-Charge Thiru @kishanreddybjp avl, @BJP4India General Secretary Thiru @tarunchughbjp, Hon MoS Thiru @Murugan_MoS, along with senior leaders and dedicated karyakartas of… pic.twitter.com/tIHZBOUA34
— K.Annamalai (@annamalai_k) April 12, 2025
இந்த தேர்தலுக்கு ஏப்ரல் 11, 2025 முதல் வேட்பு மனுக்கலை தாக்கல் செய்யலாம் என்று கூறப்பட்டு இருந்த நிலையில், நயினார் நாகேந்திரன் ஒருவர் மட்டும் மனுதாக்கல் செய்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் மாநில தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், சென்னை வானகரத்தில் இன்று (ஏப்ரல் 12, 2025) நடைபெற்ற நிகழ்வில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில், பாஜக உறுப்பினர்கள் சிலருக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
யார் யாருக்கு என்ன பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது?
பாஜகவின் புதிய மாநில தலைவராக நயினார் பொறுப்பேற்றுள்ள நிலையில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராகியுள்ளார் அண்ணாமலை. இதேபோல வானதி சீனிவாசன், தமிழிசை செளந்தரராஜன் ஆகியோரும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாகியுள்ளனர். மேலும், வினோஜ் பி செல்வம், கனகராஜ், சதீஷ் குமார், நாராயணன் திருப்பதி, எஸ்.ஜி.சூர்யா, ஆகியோரும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் பணிகள் மற்றும் கட்சி பணிகளில் இந்த தேசிய பொதுக்குழு முக்கிய பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.