அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரிடம் அமலாக்கத்துறை விசாரணை!
TVH Group ED Raid | அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். நேற்று (ஏப்ரல் 07, 2025) ரவிச்சந்திரனுக்கு சொந்தமான டிவிஎச் குழுமத்திற்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், இன்று அவரை அமலாக்கத்துறை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாதிரி புகைப்படம்
சென்னை, ஏப்ரல் 08 : தமிழ்நாடு அமைச்சர் கே.எ.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை விசாரணைக்காக அமலாக்கத்துறை (ED – Enforcement Directorate) அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர். நேற்று (ஏப்ரல் 07, 2025) அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், இன்று (ஏப்ரல் 08, 2025) அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரிடம் அமலக்கத்துறை விசாரணை
சென்னை எம்.ஆர்.சி நகர், அடையாற்றில் உள்ள டிவிஎச் (TVH) கட்டுமான நிறுவனத்தின் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (ஏப்ரல் 07, 2025) அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த நிறுவனம் சென்னையில் உள்ள மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகளில் இந்த டிவிஎச் நிறுவனம் மிகப்பெரிய கட்டுமான பணிகளை செய்து முடித்துள்ளது.
இந்த நிறுவனம் தற்போது தமிழ்நாடு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ள கே.என்.நேருவின் சகோதராரன கே.என்.ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமானது. இந்த நிலையில், சென்னையில் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (ஏப்ரல் 07,2025) அதிகாலை முதலே தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
குறிப்பாக சென்னையில் உள்ள தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, பெசண்ட் நகர், சிஐடி காலணி, எம்.ஆர்.சி நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் காலை முதலே சோதனை மேற்கொண்டு வந்தனர். சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாக இந்த நிறுவனத்தின் மீது புகார் எழுந்ததன் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக கூறப்பட்டது. மேலும், சோதனையின் முடிவில் அது குறித்து முழு தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள்
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரின் நிறுனத்திற்கு சொந்தமான இடங்களில் நேற்று (ஏப்ரல் 07, 2025) அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், இன்று (ஏப்ரல் 08, 2025) அவரது சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்றுள்ளனர். நுங்கம்பாக்கம் குஷ் குமார் சாலையில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தின் மண்டலம் ஒன்றிற்கு கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர் என்று தகவல்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.
கே.என்.ரவிச்சந்திரனிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெறப்பட்டு வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை விசாரணைக்காக அழைத்துச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெற்று வீடியோ பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமன்றி, கே.என்.ரவிச்சந்திரனுக்கு சொந்தமான அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5 கிரவுண்ட் சொத்து ஆவணங்கள் குறித்தும் சிறப்பு புலனாய்வு அவ்ழக்கு குறித்தும் அமலாத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.