Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இனி பயணித்துக்கொண்டே படிக்கலாம்… மெட்ரோ ரயில் நிலையத்தில் வரும் புத்தக பூங்கா!

Chennai Central Metro: சென்னை சென்ட்ரல் மெட்ரோவில் 2025 ஏப்ரல் 23ஆம் தேதி 5,000 சதுர அடியில் நிரந்தர புத்தக பூங்கா திறக்கப்படுகிறது. இங்கு வந்து பயணிகள் புத்தகங்களை வாசிக்கலாம், 10% தள்ளுபடியில் புத்தகங்களை வாங்கலாம். இது வெற்றிபெற்றால் மற்ற மெட்ரோ நிலையங்களிலும் விரிவாக்கப்படும் என மெட்ரோ ரயில்வே நிராகம் தெரிவித்துள்ளது.

இனி பயணித்துக்கொண்டே படிக்கலாம்… மெட்ரோ ரயில் நிலையத்தில் வரும் புத்தக பூங்கா!
சென்ட்ரல் மெட்ரோவில் புத்தக பூங்கா திறக்கப்படுகிறதுImage Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 14 Apr 2025 10:35 AM

சென்னை ஏப்ரல் 14: சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் (Chennai Metri Station) 2025 ஏப்ரல் 23-ஆம் தேதி நிரந்தர புத்தக பூங்கா (Book Park) திறக்கப்படுகிறது. 5,000 சதுர அடியில் அமைக்கப்படும் இந்த பூங்காவில் 70 புத்தக அலமாரிகள், வாசிப்பு மேசைகள், நிகழ்வு அரங்கம், சிற்றுண்டிச்சாலை உண்டு. பயணிகள் எந்த புத்தகத்தையும் வாசிக்கலாம்; விருப்பமிருந்தால் 10% தள்ளுபடியில் வாங்கலாம். புத்தக வெளியீட்டு விழாக்கள், வாசிப்பு அமர்வுகள் போன்றவை இங்கு நடைபெறும். பென்குயின், ஹார்பர் காலின்ஸ், தமிழ் வெளியீட்டாளர்கள் (Penguin, HarperCollins, Tamil Publishers) உள்ளிட்டோர் இதில் பங்கேற்க உள்ளனர். பாடநூல் கழகம் இயக்கும் இந்த திட்டம் வரவேற்பு பெற்றால், மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்.

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் வரும் 2025 ஏப்ரல் 23ஆம் தேதி நிரந்தரமாக புத்தக பூங்கா ஒன்று திறக்கப்பட உள்ளது. இந்த புதிய ஏற்பாட்டின் மூலம் 50-க்கும் மேற்பட்ட வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தங்கள் புத்தகங்களை காட்சிப்படுத்தும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ நிலையத்தின் உள்ளே 5,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும் இந்த பூங்காவில், 70 புத்தக அலமாரிகள், வாசிப்பு மேசைகள், வசதியான இருக்கைகள், ஒரு மினி நிகழ்வு அரங்கம் மற்றும் சிற்றுண்டிச்சாலை ஆகியவையும் அடங்கும்.

பயணிகளுக்கான வாசிப்பு அனுபவம்

இது ஒரு விற்பனைக்கான இடமாக மட்டுமல்லாது, பயணிகள் எந்தவொரு புத்தகத்தையும் வாசிக்கலாம், விருப்பமிருந்தால் தள்ளுபடி விலையில் வாங்கிக்கொள்ளவும் முடியும். அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன் நோக்கம் புத்தகங்களைப் பிரபலப்படுத்துவதும், வாசிப்பு பழக்கத்தைக் ஊக்குவிப்பதும் ஆகும்.

புத்தக நிகழ்வுகளுக்கும் அரங்கம்

மெட்ரோ நிலையத்தில் தினசரி சுமார் 3 லட்சம் பயணிகள் வருகை தரும் நிலையில், இந்த பூங்கா ஒரு புத்தக கலாச்சார மையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு புத்தக வெளியீட்டு விழாக்கள், வாசிப்பு அமர்வுகள் மற்றும் பிற நிகழ்வுகள் நடத்தப்படும்.

பென்குயின், ஹார்பர் காலின்ஸ் போன்ற தேசிய, அகில இந்திய பதிப்பாளர்கள், பிரபல தமிழ் வெளியீட்டாளர்களுடன் இணைந்து தங்கள் புத்தகங்களை இங்கு காட்சிப்படுத்த உள்ளனர். ஹிக்கின்பாதம் போன்ற புத்தக விற்பனையாளர்களுக்கும் இங்கு விற்பனை செய்ய வாய்ப்பு உண்டு. இளைஞர்களை ஈர்க்கும் வகையில் காமிக்ஸ், குழந்தைகள் புத்தகங்கள் உள்ளிட்ட வகைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும்.

மாநில அளவிலான திட்டம்

கல்வியியல் சேவைகள் கழகம் மற்றும் தமிழ்நாடு பாடநூல் இந்த புத்தக பூங்காவை வருவாய் பகிர்வு அடிப்படையில் நிர்வகிக்கும் என அறிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் பயணிகளின் வரவேற்பைப் பொருத்து, இதுபோன்ற பூங்காக்கள் பிற மெட்ரோ நிலையங்களிலும் தொடங்கப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும், பாடப்புத்தகங்கள் மற்றும் பிற கல்வி புத்தகங்களை விற்கும் நோக்கத்துடன், மாநிலம் முழுவதும் கியோஸ்க்குகள் அமைக்கும் திட்டமும் நடைமுறையில் உள்ளது. முதல்கட்டமாக 10 முதல் 15 புத்தக கடைகள் தொடங்கப்பட உள்ளன. பாடநூல் கழகம் அச்சிடும் புத்தகங்களை எளிமையாகக் கிடைக்கச் செய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உச்சத்தில் மீன் விலை.. சிக்கன் வைத்து இப்படி செஞ்சு பாருங்க!
உச்சத்தில் மீன் விலை.. சிக்கன் வைத்து இப்படி செஞ்சு பாருங்க!...
PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி?
PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி?...
உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி குடிமக்களுக்கு அட்வைஸ்!
உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி குடிமக்களுக்கு அட்வைஸ்!...
அறுந்த மின்கம்பி! தெரியாமல் கால் வைத்த சிறுவனை மீட்ட இளைஞர்!
அறுந்த மின்கம்பி! தெரியாமல் கால் வைத்த சிறுவனை மீட்ட இளைஞர்!...
எனக்கு நடிக்கவே ஆசை இல்லை.. எல்லாம் அவரால்தான்.. நடிகை ஜோதிகா!
எனக்கு நடிக்கவே ஆசை இல்லை.. எல்லாம் அவரால்தான்.. நடிகை ஜோதிகா!...
உலக அளவில் மோகன்லாலின் எல்2: எம்புரான் இதுவரை செய்த வசூல்?
உலக அளவில் மோகன்லாலின் எல்2: எம்புரான் இதுவரை செய்த வசூல்?...
ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம்.. இந்தியாவிலும் அதிர்வு!
ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம்.. இந்தியாவிலும் அதிர்வு!...
சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி!
சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி!...
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது பரபரப்பு - பரபரப்பு வாக்குமூலம்!
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது பரபரப்பு - பரபரப்பு வாக்குமூலம்!...
கோடையில் மாம்பழம் ருசிக்க ஆசை? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!
கோடையில் மாம்பழம் ருசிக்க ஆசை? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!...
2025-ல் அதிக கூலிங் கொடுக்கக் கூடிய டாப் 5 சிறந்த ஏசிகள் !
2025-ல் அதிக கூலிங் கொடுக்கக் கூடிய டாப் 5 சிறந்த ஏசிகள் !...