சென்னையில் மின்சார ரயில் தடம்புரண்டு விபத்து.. பயணிகள் அச்சம்!
Chennai Electric Train Accident | சென்னை ஆவடியில் இருந்து சென்ற மின்சார ரயில் ராயபுரம் - பீச் ஸ்டேஷன்ன் இடையே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து விலகிய நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மின்சார ரயில் விபத்து குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னை, ஏப்ரல் 22 : சென்னை ராயபுரம் – பீச் ஸ்டேஷன் (Beach Station) இடையே மின்சார ரயில் தடம் புரண்டு (Electric Train Derail) விபத்துக்குள்ளானது. ஆவடியில் இருந்து வந்த மின்சார ரயில் பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய நிலையில், ரயில் தடம் புரண்டுள்ளது. ரயில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளான நிலையில், ரயிலில் பயணித்த பயணிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். பிரச்னையை உணர்ந்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்ட நிலையில், பெரும் அசம்பாவிதம் தவிர்கப்பட்டது. இந்த நிலையில், மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னையில் பிரதான போக்குவரத்து சேவையாக உள்ள மின்சார ரயில்கள்
சென்னையின் பிரதான போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக இருப்பது ரயில் போக்குவரத்து. சென்னையை பொருத்தவரை பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என பெரும்பாலான மக்களின் முக்கிய தேர்வாக ரயில் போக்குவரத்து உள்ளது. பேருந்தில் அல்லது வேறு ஏதேனும் போக்குவரத்தில் பயணிக்கும்போது போக்குவரத்து நெரிசல், கால தாமதம் உள்ளிட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும். எனவே விரைவாக பயணம் செய்வதற்காக பொதுமக்கள் ரயில் போக்குவரத்தை தேர்வு செய்கின்றனர். இதற்காக சென்னையில் புறநகர் பகுதிகள் ஏராளமான மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தடம் புரண்டு விபத்துக்குள்ளான மின்சார ரயில் – பொதுமக்கள் அச்சம்
ஆவடியில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரயில் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. இந்த நிலையில் ரயில், ராயபுரம் – பீச் ஸ்டேஷன் இடையே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதாவது, அந்த மின்சார ரயிலில் 3வது பெட்டியில் 2 ஜோடி சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியுள்ளன. இதன் காரணமாக ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. ரயில் மிதமான வேகத்தில் சென்ற நிலையில், தடம் புரண்டதால் பெரிய விபத்து எதுவும் ஏற்படவில்லை. ரயில் தடம் புரண்ட தகவல் அறிந்து பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இருப்பினும் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்ட நிலையில், பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.