AIADMK : அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு ஈபிஎஸ் விருந்து.. கூட்டணி எதிர்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பிளான்!

AIADMK - BJP Alliance | 2025 சட்டமன்ற தேர்தலை அதிமுக - பாஜக இணைந்து களம் காண உள்ளதாக அறிவித்த நிலையில், அதிமுக உறுப்பினர்கள் சிலருக்கு அதில் விருப்பம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அதனை வெளிப்படுத்தும் விதமாக சில சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி தலைவர்கள் பேசி வருகின்றனர்.

AIADMK : அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு ஈபிஎஸ் விருந்து.. கூட்டணி எதிர்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க பிளான்!

எடப்பாடி பழனிசாமி

Published: 

19 Apr 2025 08:01 AM

சென்னை, ஏப்ரல் 19 : அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (AIADMK – All India Anna Dravida Munnetra Kazhagam) சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏப்ரல் 23, 2025 அன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருந்தளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் (2025 Tamil Nadu Budget) கூட்டத்தொடரில் சிறப்பாக பங்காற்றியதற்காக இந்த விருந்து வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி, இந்த விருந்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில், எம்.எல்.ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து அளிப்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2026 சட்டமன்ற தேர்தலை பாஜக கூட்டணியுடன் சந்திக்கும் அதிமுக

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேதல் நடைபெற உள்ள நிலையில், அதற்காக கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக 2021 சட்டமன்ற தேர்தலை பாஜகவுடன் கூட்டணி அமைத்து சந்தித்தது. ஆனால், இந்த தேர்தல் அதிமுகவுக்கு படுதோல்வியை வழங்கிய நிலையில், திமுக அபார வெற்றி பெற்றது. இருப்பினும் தேர்தலுக்கு பிறகும் அதிமுக பாஜக கூட்டணி நீடித்து வந்த நிலையில், அது முறிவுற்றது.

இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில காலமே உள்ள நிலையில், மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி அமையுமா என எதிர்ப்பார்க்கப்பட்டது. அப்போது பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா இரண்டு நாட்கள் பயணமாக சென்னை வந்திருந்தார். அப்போது அமித்ஷா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக, பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது.

அமித்ஷா தலைமையில் உறுதியான கூட்டணி

தொண்டர்களுக்கு விருந்து வழங்கும் எடப்பாடி பழனிசாமி

கூட்டணி உறுதியானதை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை அதிமுக மேற்கொண்டு வருகிறது. அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள இருந்தாலும், அதில் சில உறுப்பினர்களுக்கு விருப்பமில்லை என்பது தெரியவந்துள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாக சிலரின் பேச்சுக்குகள் இருந்தன. இந்த நிலையில், மே 2, 2025 அன்று அதிமுக செயற்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தது ஏன் என்பது குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அன்றைய தினர் எம்.எல்.ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் விருந்தும் அளிக்கப்பட உள்ளது. கட்சி தலைமை கொண்டுவரும் தீர்மானங்களுக்கு எந்த வித இடையூரும் வந்துவிட கூடாது என்பதற்காக இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.