பெண்கள் குறித்து சர்ச்சை.. அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பு.. அதிரடி காட்டிய ஸ்டாலின்!

Minister Ponmudi Controversy: பெண்கள் குறித்து இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடியை துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பொன்முடி வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவியதை அடுத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் குறித்து சர்ச்சை.. அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பு.. அதிரடி காட்டிய ஸ்டாலின்!

அமைச்சர் பொன்முடி

Updated On: 

11 Apr 2025 13:15 PM

சென்னை, ஏப்ரல் 11: தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியை (Minister Ponmudi) திமுக துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) அறிவித்துள்ளார். பெண்கள் குறித்து இழிவாக பேசியதை அடுத்து, ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். வழக்கமாக பொதுச் செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுக்கும் நிலையில், ஸ்டாலின் பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், அமைச்சர் பொன்முடியிடம் இருந்த பொறுப்பை பறித்து, திருச்சி சிவாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு

திமுகவில் மூத்த அமைச்சராக இருக்கும் பொன்முடி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். குறிப்பாக பெண்கள் குறித்தும் அவதூறாக பேசி வருகிறார் பொன்முடி. இதனால், உட்கட்சியிலேயே அவர் மீது கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

அதாவது,  சில ஆண்டுகளுக்கு முன்பு பேருந்தில் பெண்கள் ஓசியில் பயணிப்பதாக பொன்முடி பேசியது சர்ச்சையானது.  அதாடு, செய்தியாளர் சந்திப்பில், ”எனக்கு ஓட்டு போட்டு கிழச்சீங்களா?”  என பொன்முடி பெண்களை கடிந்து கொண்டது சர்சையானது. இப்படி பல சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடினுக்கு, முதல்வர் ஸ்டாலின் பலமுறை வார்னிங் கொடுத்திருக்கிறார்.

இருப்பினும், தொடர்ந்து பொன்முடி பெண்கள் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பெண்கள்  குறித்து வனத்துறை அமைச்சர் பொன்முடி இழிவாக பேசி இருக்கிறார். இதற்கு பலரும் கண்டனம்  தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பு

அதாவது, பாலியல் தொழில் செய்யும் பெண்கள் குறித்து சைவ மற்றும் வைணவ சமயங்களை குறிப்பிட்டு,  இழிவாக பொன்முடி பேசியுள்ளார்.  இவரது வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு திமுக எம்.பிக்கள், அமைச்சர்களே கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  குறிப்பாக, கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்திருந்தார்.

பொன்முடிக்கு கண்டனம்


அதாவது, “அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய‌ பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், பாஜகவின் தமிழகப் பிரிவின் துணைத் தலைவர் நாராயண திருப்பதியும் பொன்முடியின் பேச்சு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

அதன்படி, “அமைச்சர் பொன்முடி தனது பதவியில் தொடர்வது வெட்கக்கேடானது…. முதல்வர் ஸ்டாலின், பொன்முடியை கைது செய்ய உத்தரவிடுவீர்களா? அவர் தனது கருத்துகளால் தமிழகப் பெண்களை அவமதித்துள்ளார்” என்று கடுமையாக விமர்சித்தார்.

பொன்முடியின் பேச்சு சர்ச்சையை கிளப்பியதை அடுத்து, அவரை துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ஸ்டாலின் நீக்கியுள்ளார். அந்த பொறுப்பில் திருச்சி சிவாவை நியமித்துள்ளார். மேலும்,  பொன்முடியின் அமைச்சர் பதவியும் பறிக்கப்படலாம்  என்று  கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.