Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

“மிகப் பெரிய தவறு” மாற்றுத்திறாளிகள் குறித்து சர்ச்சை… மன்னிப்பு கேட்ட துரைமுருகன்!

Duraimurugan Controversy On Differently Abled People: மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்டுள்ளார். அதாவது, மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும் என்றும் அதற்காக நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவிக்கிறேன் என்று அறிக்கை வாயிலாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

“மிகப் பெரிய தவறு” மாற்றுத்திறாளிகள் குறித்து சர்ச்சை… மன்னிப்பு கேட்ட துரைமுருகன்!
அமைச்சர் துரைமுருகன்Image Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 11 Apr 2025 13:12 PM

சென்னை, ஏப்ரல் 11: மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததற்காக தமிழக அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்டுள்ளார். சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் பொன்முடி பேசியதற்கு முதல்வர் ஸ்டாலின் அவர் மீது நடவடிக்கை எடுத்த சில மணி நேரத்திலேயே, அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிய பேசிய துரைமுருகன், மாற்றுத்திறனாளிகளை ஊனமுற்றவர்கள் என்ற வார்த்தை பயன்படுத்தி இழிவாக பேசி இருக்கிறார்.

மாற்றுத்திறாளிகள் குறித்து சர்ச்சை

இதற்கு தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அவர், ”ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளை பழைய பெயரையே கொண்டு உச்சரித்து விட்டேன் என்று கழகத் தலைவர் தளபதி அவர்கள் என் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, நான் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன்.

கலைஞரால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப் பெரிய தவறாகும். மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தலைவர் தளபதி அவர்கள், எந்தளவிற்கு வருந்தியிருப்பார் என்பது எனக்குத் தெரியும்.

மன்னிப்பு கேட்ட துரைமுருகன்


அவருக்கும் என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.   முன்னதாக, பெண்கள் குறித்து இழிவான கருத்தை  வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசியிருந்தார். இந்த விஷயம் சர்ச்சையை கிளப்பியதை அடுத்து, அவர் வகித்து வந்த துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ஸ்டாலின் நீக்கி உத்தரவிட்டார்.

அந்த பொறுப்புக்கு திருச்சி சிவாவை நியமித்துள்ளார். இந்த நிலையில் தான்,  தான் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு துரைமுருகன் மன்னிப்பு கேட்டார்.  திமுகவில் உள்ள சீனியர் அமைச்சர்கள் பலரும் சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.

இதனால்,  அமைச்சர்களுக்கு மீது ஸ்டாலினுக்கு அதிருப்தி இருக்கிறது.  இதுகுறித்து அமைச்சர்களை பலமுறை ஸ்டாலின் கண்டித்திருக்கிறார். இருப்பினும், அமைச்சர்கள் பலரும் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர். இதனால், ஸ்டாலினும் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்சத்தில் மீன் விலை.. சிக்கன் வைத்து இப்படி செஞ்சு பாருங்க!
உச்சத்தில் மீன் விலை.. சிக்கன் வைத்து இப்படி செஞ்சு பாருங்க!...
PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி?
PPFல் தம்பதிகள் ரூ.1 கோடி லாபம் பெறுவது எப்படி?...
உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி குடிமக்களுக்கு அட்வைஸ்!
உலக கல்லீரல் தினத்தில் பிரதமர் மோடி குடிமக்களுக்கு அட்வைஸ்!...
அறுந்த மின்கம்பி! தெரியாமல் கால் வைத்த சிறுவனை மீட்ட இளைஞர்!
அறுந்த மின்கம்பி! தெரியாமல் கால் வைத்த சிறுவனை மீட்ட இளைஞர்!...
எனக்கு நடிக்கவே ஆசை இல்லை.. எல்லாம் அவரால்தான்.. நடிகை ஜோதிகா!
எனக்கு நடிக்கவே ஆசை இல்லை.. எல்லாம் அவரால்தான்.. நடிகை ஜோதிகா!...
உலக அளவில் மோகன்லாலின் எல்2: எம்புரான் இதுவரை செய்த வசூல்?
உலக அளவில் மோகன்லாலின் எல்2: எம்புரான் இதுவரை செய்த வசூல்?...
ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம்.. இந்தியாவிலும் அதிர்வு!
ஆப்கானிஸ்தான் பகுதியில் நிலநடுக்கம்.. இந்தியாவிலும் அதிர்வு!...
சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி!
சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் உருவாகிறதா? இயக்குநர் சுந்தர் சி!...
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது பரபரப்பு - பரபரப்பு வாக்குமூலம்!
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது பரபரப்பு - பரபரப்பு வாக்குமூலம்!...
கோடையில் மாம்பழம் ருசிக்க ஆசை? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!
கோடையில் மாம்பழம் ருசிக்க ஆசை? இப்படி செய்தால் ஆரோக்கியம் கெடாது!...
2025-ல் அதிக கூலிங் கொடுக்கக் கூடிய டாப் 5 சிறந்த ஏசிகள் !
2025-ல் அதிக கூலிங் கொடுக்கக் கூடிய டாப் 5 சிறந்த ஏசிகள் !...