சைவமா? வைணமா? பொன்முடியின் கொச்சை பேச்சு… கொதித்தெழுந்த கனிமொழி.. நடந்தது என்ன?
Kanimozhi MP Condemns Minister Ponmudi: பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடிக்கு, எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது, பொன்முடியின் பேச்சுகள் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

சென்னை, ஏப்ரல் 11: தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி (Minister Ponmudi) பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். குறிப்பாக, பாலியல் தொழில் செய்யும் பெண்கள் குறித்து அவர் பேசிய பேச்சு அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு இருந்தது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, திமுகவினரே கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது கனிமொழி எம்.பி (MP Kanimozhi) கண்டனம் தெரிவித்துள்ளது.
பொன்முடியின் கொச்சை பேச்சு
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்திருந்தார்.
திமுக அமைச்சர்கள் செய்வதும், பேச்சுவது தொடர் சர்சையை ஏற்படுத்தி வருகிறது. மூத்த அமைச்சர் துரைமுருகன் தொடங்கி கே.என்.நேரு, நாசர், ராஜகண்ணப்பன் என பலரும் சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக, அமைச்சர் பொன்முடி பேசும் கருத்துகள் பெரும் விமர்சித்தினத்திற்கு உள்ளாகி வருகிறது.
அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவ சமயங்களை குறிப்பிட்டு, பெண்கள் குறித்து கொச்சையாக பேசியிருந்தார். இவரது பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கண்டனம் தெரிவித்த கனிமொழி
அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) April 11, 2025
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இதற்கு கனிமொழி என்.பி. கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
திமுகவின் மூத்த தலைவர்கள் மட்டுமின்றி, அதன் நிர்வாகிகளும் தொடர் சர்ச்சையில் ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சைக்கு பெயர்போனவர். அண்மையில் கூட இஸ்லாமியர்கள் குறித்து அவர் பேசிய கருத்துகள் சமூகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதற்கு முன்பு குஷ்பு குறித்து அவர் பேசிய கருத்துகள் கைது நடவடிக்கை வரை சென்றது.
அதாவது குஷ்பு குறித்து அவதூறாக பேசியதற்கு 2023ஆம் ஆண்டு கிருஷ்ணமூர்த்தி கைதானார். அப்போது திமுகவில் இருந்து தற்காலிக நீக்கப்பட்ட அவர், மன்னிப்பு கோரி மீண்டும் சேர்க்கப்பட்டார். அதற்கு 4 வாரங்களுக்கு முன்பு இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசியதால் நிரந்தரமாக திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சூழலில், மீண்டும் பொன்முடி பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார். இதனால், பொன்முடி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.