ஒரே போஸ்டர்.. திமுக கூட்டணியில் குழப்பம்.. துணை முதல்வராகும் செல்வப்பெருந்தகை?

Selvaperunthagai Poster : தமிழக காங்கிரஸ் தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை 2025 ஏப்ரல் 14ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில் துணை முதல்வரே என்றும் ஆட்சி அதிகாரத்திலும் பங்கு என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஒரே போஸ்டர்.. திமுக கூட்டணியில் குழப்பம்.. துணை முதல்வராகும் செல்வப்பெருந்தகை?

செல்வப்பெருந்தகை

Updated On: 

13 Apr 2025 13:18 PM

சென்னை, ஏப்ரல் 13: சென்னையில் பல்வேறு இடங்களில் 2026 துணை முதல்வர் செல்வப்பெருந்தகை என குறிப்பிட்டு ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டதாக தெரிகிறது. தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை 2025 ஏப்ரல் 14ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதனையொட்டி, சென்னையில் பல்வேறு இடங்களில் 2026 துணை முதல்வர் செல்வப்பெருந்தகை என குறிப்பிட்டு ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

துணை முதல்வராகும் செல்வப்பெருந்தகை?

தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு அனைத்து  கட்சிகளும் தயாராகி வருகின்றன. குறிப்பாக, கூட்டணி பேச்சுகள் தற்போதே தொடங்கி உள்ளன. இதில் திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், பிரதான கட்சியாக இருப்பது காங்கிரஸ். அதைத் தொடர்ந்து, சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திமுக கூட்டணியில் இருந்து வருகிறது. 2016, 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் காங்கிரஸ் இடம்பெற்றிருந்தது.

மேலும், லோக்சபா தேர்தல்களிலும் இடம்பெற்றிருந்தது. இதனால், லோக்சபா மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களிலும் காங்கிரஸ் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அதிக இடங்கள் ஒதுக்கப்படுகிறது.  2026 சட்டப்பேரவை தேர்தலிலும் இதே கூட்டணியே தொடரும்.

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இந்த சூழலில், செல்வப்பெருந்தகை குறித்து ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைரவாக உள்ள செல்வப்பெருந்தகை 2025 ஏப்ரல் 14ஆம் தேதி (நாளை) பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதனைமுன்னிட்டு, சென்னையில் பல்வேறு இடங்களில் அவருக்கு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில் 2026ஆம் ஆண்டு துணை முதல்வரே.. ஆட்சியில் பங்கு.. அதிகாரத்திலும் பங்கு என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2026 என்பது திமுக கொடியின் நிறுத்திலும், துணை முதல்வரே என்பது காங்கிரஸ் கட்சி கொடி நிறுத்திலும் அச்சிடப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே, திமுக கூட்டணியில் உள்ள  விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கூறி வருகிறார்.  இதனால் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.  இந்த சூழலில்,  செல்வப்பெருந்தகைக்கு ஒட்டப்பட்ட போஸ்டதில் ஆட்சி அதிகாரத்திலும் பங்கு என குறிப்பிடப்பட்டு இருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி விளக்கம் தர வேண்டும் என செல்வப்பெருந்தகை உத்தரவிட்டிருக்கிறார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “உங்கள் அநாகரிகமான செயல் கட்சியின் கட்டுப்பாடு, கண்ணியத்தை மீறியுள்ளது. காங்கிரஸ் மாநில செயலாளர் ஏவிஎம் ஷெரீப் 15 நாட்களுக்குள் எழுத்துப் பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும். தங்கள் விளக்கத்தின் அடிப்படையில், உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

(மேலும் தகவல்கள் அப்டேட் செய்யப்படுகிறது)