Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழகத்தில் ஜூன் 16-ல் கல்லூரிகள் திறப்பு.. கல்லூரி கல்வி இயக்குநகரம் அறிவிப்பு!

College Reopen Date Announced in Tamil Nadu | தமிழகத்தில் மே மாதத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும் நிலையில், கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், கல்லூரிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கல்லூரி கல்வி இயக்குநகரம் அறிவித்துள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் ஜூன் 16-ல் கல்லூரிகள் திறப்பு.. கல்லூரி கல்வி இயக்குநகரம் அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 24 Apr 2025 16:44 PM

சென்னை, ஏப்ரல் 24 : தமிழகத்தில் கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வு (Semester Exam) முடிவடைந்துள்ள நிலையில், கோடை விடுமுறைக்கு (Summer Holiday) பிறகு மீண்டும் எப்போது கல்லூரிகள் திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் மே மாதத்தில் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிகப்படும் நிலையில், இந்த ஆண்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோடை விடுமுறைக்கு பிறகு அரசு மற்று அரசு உதவி பெறும் கல்லூரிகள் எப்போது திறக்கும் என்பது குறித்து கல்லூரி கல்வி இயக்குநகரம் அறிவித்துள்ளது.

மே மாதத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கும் அரசு

தமிழகத்தை பொறுத்தவரை 1 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு மூன்று முறை தேர்வு நடைபெறும். அதாவது, காலாண்டு, அறையாண்டு, முழு ஆண்டு என மூன்று தேர்வு நடைபெறும். இதேபோல கல்லூரிகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும். இந்த நிலையில், பள்ளிகளுக்கு நடைபெறும் முழு ஆண்டு தேர்வுக்கு மே மாதத்திலும், கல்லூரிகளுக்கு நடைபெறும் ஆண்டின் இரண்டாம் பருவ தேர்வுக்கு மே மாதத்திலும் விடுமுறை அளிக்கப்படும்.

தமிழகத்தில் 2025 – 26 கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28, 2025 அன்று தொடங்கி ஏப்ரல் 15, 2025 அன்று முடிவடைந்தது. 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 05, 2025 முதல் மார்ச் 27, 2025 வரை நடைபெற்றது.  12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 03, 2025 முதல் மார்ச் 25, 2025 வரை நடைபெற்றது. இதேபோல 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏர்பல் 21, 2025 வரையும், 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு ஏர்பல் 21, 2025 வரை தேர்வு நடைபெற்றது. இதேபோல 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 25, 2025 வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுகள் முடிவடைந்த பிறகு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிகப்படும். அதன்படி, தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2, 2025 அன்று பள்ளிகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கோடை விடுமுறைக்கு பிறகு கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் எனபது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு எப்போது?

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் 2, 2025 அன்று பள்ளிகள் திறக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ள நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் ஜுன் 16, 2025 அன்று திறக்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குநகரம் அறிவித்துள்ளது. வெயிலின் தாக்கத்தை பொறுத்து இந்த தேதிகளில் மாற்றம் செய்யப்படுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 27 முதல் பாகிஸ்தானியர்களின் விசாக்கல் ரத்து - இந்திய அரசு!
ஏப்ரல் 27 முதல் பாகிஸ்தானியர்களின் விசாக்கல் ரத்து - இந்திய அரசு!...
இனி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பாடல்களை இணைப்பது எப்படி?
இனி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பாடல்களை இணைப்பது எப்படி?...
நடிகர் ஆசிப் அலியின் நடிப்பில் வெளியானது ‘சர்கீத்’ பட ட்ரெய்லர்!
நடிகர் ஆசிப் அலியின் நடிப்பில் வெளியானது ‘சர்கீத்’ பட ட்ரெய்லர்!...
தளபதி விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை தவறவிட்டேன்...
தளபதி விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை தவறவிட்டேன்......
ஓடிடியில் வெளியானது விக்ரமின் வீர தீர சூரன் பாகம் 2...
ஓடிடியில் வெளியானது விக்ரமின் வீர தீர சூரன் பாகம் 2......
ஹிட் 3 படத்தில் கேமியோ ரோலில் கார்த்தி? நானியின் கலகலப்பான பதில்
ஹிட் 3 படத்தில் கேமியோ ரோலில் கார்த்தி? நானியின் கலகலப்பான பதில்...
தஞ்சை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து: மக்கள் அதிருப்தி!
தஞ்சை அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து: மக்கள் அதிருப்தி!...
திருமண வாழ்க்கையில் 25 வருடங்களை நிறைவு செய்த அஜித் - ஷாலினி!
திருமண வாழ்க்கையில் 25 வருடங்களை நிறைவு செய்த அஜித் - ஷாலினி!...
சிம்லா ஒப்பந்தம் ரத்து - அதிரடி முடிவு எடுத்த பாகிஸ்தான்!
சிம்லா ஒப்பந்தம் ரத்து - அதிரடி முடிவு எடுத்த பாகிஸ்தான்!...
ஆன்மீகத்தில் பச்சை கற்பூரத்தின் முக்கியத்துவம்!
ஆன்மீகத்தில் பச்சை கற்பூரத்தின் முக்கியத்துவம்!...
சிந்து நதிநீரை நிறுத்திய இந்தியா - பாகிஸ்தான் எச்சரிக்கை!
சிந்து நதிநீரை நிறுத்திய இந்தியா - பாகிஸ்தான் எச்சரிக்கை!...