பணம் திருடியதாக சந்தேகம்.. மன வேதனையில் விபரீத முடிவு எடுத்து கோவை கல்லூரி மாணவி!

Coimbatore College Student Suicide: கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவி மீது திருட்டு பட்டம் சுமத்தியதால் அவர் அவமானம் அடைந்து கல்லூரியில் ஐந்தாவது மாடியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணம் திருடியதாக சந்தேகம்.. மன வேதனையில் விபரீத முடிவு எடுத்து  கோவை கல்லூரி மாணவி!

தற்கொலை செய்து கொண்ட மாணவி

Updated On: 

17 Apr 2025 07:00 AM

கோயம்புத்தூர், ஏப்ரல் 17: கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவி நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1,500 ரூபாயை திருடியாக கூறி விசாரணை நடத்தியதால், மன வேதனையில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனுப்பிரியா (19). இவர் கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பிறகு, தாயார் வானதி பராமரிப்பில் மாணவி அனுப்பிரியா இருந்து வந்தார்.

பணம் திருடியதாக சந்தேகம்

2025 ஏப்ரல் 15ஆம் தேதி முதலாம் ஆண்டு மற்றும மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. பின்னர், தங்களது வகுப்பறையில் வைத்துவிட்டு அனைவரும் மதிய உணவு சாப்பிட சென்றிருக்கின்றனர்.

மதிய உணவிற்கு பிறகு திரும்பி வந்தபோது, நான்காம் ஆண்டு படிக்கும் மணாவி வைத்து இருந்த பையில் இருந்த ரூ.1500 பணம் காணாமல் போனதாக தெரிகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி உடனே பேராசிரியர்களிடம் கூறினார். அப்போது, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பார்த்தபோது, அனுபிரியா தனியாக அந்த அறையை விட்டு வெளியே வந்தது தெரியவந்தது.

இதனால், அந்த அனுபிரியா எடுத்து இருக்கலாம் என பேராசிரியர்கள் சந்தேகித்தனர். இதனை அடுத்து, அவரை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் ஐந்தாவது மாடியில் வைத்து விசாரித்துள்ளனர். அப்போது சக மாணவர்கள் உடன் இருந்துள்ளனர்.

தான் பணம் எடுக்கவில்லை என்று அனுபிரியா தொடர்ந்து கூறி வந்ததாகவும், இருப்பினும் அவரிடம் பேராசிரியர்கள் மாலை வரை விசாரித்து உள்ளதாக தெரிகிறது. மாலை 6.30 மணிக்கு வீட்டிற்கு செல்லுபடி பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.

மன வேதனையில் விபரீத முடிவு எடுத்து மாணவி

சக மாணவர்கள் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தியதால் அனுபிரியா சோகத்துடன் இருந்திருக்கிறார். அப்போது, 5 வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அனுபிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அனுபிரியாவின் உடலை வாங்க மறுத்து, குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டம் நடத்தினர். மாணவி அனுபிரியா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு, 2025 ஏப்ரல் 16ஆம் தேதியான நேற்று மாலை உடலை பெற்றனர்.

(மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)