கோவை மாணவி விவகாரத்தில் தீண்டாமை நடைபெறவில்லை.. ஏஎஸ்பி விளக்கம்!
Coimbatore School Girl Exam Controversy | கோயம்புத்தூரில் பூப்பெய்தியதன் காரணமாக 8 ஆம் வகுப்பு மாணவி வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுதப்பட்ட விவகாரத்தில், மாணவியின் தாய் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தான் அவ்வாறு தேர்வு எழுத வைத்ததாக மாவட்ட ஏஎஸ்பி விளக்கம் அளித்துள்ளார். அவர் என்ன கூறியுள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

காவல்துறை விசாரணை
கோயம்புத்தூர், ஏப்ரல் 10 : கோயம்புத்தூரில் பூப்பெய்திய (Puberty) மாணவியை வகுப்பறையின் வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த விவகாரத்தில், அந்த பள்ளியின் முதல்வர் ஆனந்தி என்பவரை தற்காலிக பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாக உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், மாணவியின் பெற்றோர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலே மாணவி, வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைக்கப்பட்டதாக மாவட்ட ஏஎஸ்பி சிருஷ்டி சிங் விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில், மாணவி வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைக்கப்பட்டது ஏன், அது குறித்து ஏஎஸ்பி கூறியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைக்கப்பட்ட மாணவி
கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த 8 ஆம் வகுப்பு மாணவி, ஏப்ரல் 5, 2025 அன்று பூப்பெய்தியுள்ளார். இந்த நிலையில், முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தேர்வு எழுதுவதற்காக சென்ற மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர். இதனை கண்ட மாணவியின் தாயார், ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் அளித்ததுடன் “எங்கள் பள்ளியில் இப்படிதான் நடக்கும். வேண்டுமெனில் வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளனர்.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
A Dalit girl in Tamil Nadu’s Coimbatore was made to sit outside her classroom during exams after starting menstruation, sparking outrage. The girl’s mother has demanded action, and authorities are investigating the incident. pic.twitter.com/B2h14iPNsy
— The Observer Post (@TheObserverPost) April 10, 2025
இந்த நிலையில், மாணவி வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுதப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து கடும் எதிர்ப்புகள் எழுந்து வந்த நிலையில், அந்த பள்ளியின் முதல்வர் ஆனந்தியை தற்காலிக பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாக உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்திற்கு எதிராக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும் தனது கண்டங்களை பதிவு செய்திருந்தார். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்டம் ஏஎஸ்பி விளக்கம் அளித்துள்ளார்.
பள்ளி மாணவி விவகாரத்தில் மாவட்ட ஏஎஸ்பி விளக்கம்
பள்ளி மாணவி வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுதப்பட்ட விவகாரம் குறித்து மாவட்ட ஏஎஸ்பி சிருஷ்டி குமார் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், கோவை தனியார் பள்ளியில் தீண்டாமை நடைபெறவில்லை. தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி தனியே அமர வைக்க மாணவியின் தாய் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து அவரை தனியாக அமர வைத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பாதிகப்பட்ட 8 ஆம் வகுப்பு சிறுமியிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.