Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கோவை போக்சோ வழக்கு: மூணாறில் பிடிபட்டார் மத போதகர் ஜான் ஜெபராஜ்…

Coimbatore Pastor Arrested: கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்த மத போதகர் ஜான் ஜெபராஜ், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்தார். சில மாதங்கள் தலைமறைவாக இருந்த அவர், கேரளா மாநிலம் மூணாறில் கைது செய்யப்பட்டு அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோவை போக்சோ வழக்கு: மூணாறில் பிடிபட்டார் மத போதகர் ஜான் ஜெபராஜ்…
மூணாறில் பிடிபட்டார் மத போதகர் ஜான் ஜெபராஜ்Image Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 13 Apr 2025 14:45 PM

கோவை ஏப்ரல் 13: போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த மத போதகர் கைது (John Jebaraj arrest) செய்யப்பட்டார். கேரள மாநிலம் மூணாறில் வைத்து ஜான் ஜெபராஜ்ஜை காவலர்கள் கைது செய்தனர். கோயம்புத்தூர் (Coimbatore) பகுதியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரில் பெயர்ச்சிக்குண்ட மத போதகர் ஜான் ஜெபராஜ் (வயது 35), கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்தார். தென்காசி மாவட்டம் சாம்பார் வடகரை பகுதியைச் சேர்ந்த இவர், கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் வசித்து வந்ததுடன், ‘கிங் ஜெனரேஷன்’ என்ற கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்தை நிறுவி அதில் மதபோதகராக செயல்பட்டு வந்தார்.

சமூக வலைதளங்களில் ஆடல், பாடலுடன் கூடிய அவரது போதனைகள் மூலம் பரவலான பார்வையாளர்களை ஈர்த்திருந்த ஜான் ஜெபராஜ் மீது, கடந்த 2024 மே 21 ஆம் தேதி நடந்த அவரது வீட்டுவிருந்தில் கலந்துகொண்ட சிறுமிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

இந்த புகாரின் அடிப்படையில், கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரேணுகாதேவி, ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தார். அதன் பின்னர், போலீசார் அவரை தேடி வந்தபோதும் அவர் தலைமறைவாகி விட்டார்.

வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க போலீசார் அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பினர். மேலும், கோவை காவல் ஆணையர் சரவணா சுந்தர் மூன்று தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையை தொடங்கினார்.

உயர்நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனுத்தாக்கல்

இதற்கிடையே, ஜான் ஜெபராஜ் 2025 ஏப்ரல் 10 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனுத்தாக்கல் செய்திருந்தாலும், போலீசார் தொடர்ந்து தேடிக்கொண்டிருந்தனர். இந்தக் கோஷ்டி நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் அவரை தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.

மூணாறில் பிடிபட்டார் மத போதகர் ஜான் ஜெபராஜ்

இந்நிலையில், கடந்த 2025 ஏப்ரல் 12ஆம் தேதி இரவு, காவல் ஆய்வாளர் அர்ஜூன் தலைமையிலான தனிப்படை, ஜான் ஜெபராஜை கேரள மாநிலம் மூணாறில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்தபோது கைது செய்தது. கைது செய்யப்பட்ட ஜான் ஜெபராஜை கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு போலீசார், அழைத்து வந்தனர்.

பின்னர் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை 2025 ஏப்ரல் 13 நீதிபதி நந்தினி தேவி வீட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 2025 ஏப்ரல் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். தற்போது ஜான் ஜெபராஜ் கோவை மத்திய சிறையில் போலீஸ் பாதுகாப்புடன் அடைக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவலம்.. பக்தர்களுக்கு வேண்டுகோள்!
திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி கிரிவலம்.. பக்தர்களுக்கு வேண்டுகோள்!...
புதுசா வீடு கட்டுறீங்களா? முக்கிய பொருட்களின் விலை இன்று உயர்வு..
புதுசா வீடு கட்டுறீங்களா? முக்கிய பொருட்களின் விலை இன்று உயர்வு.....
எம்.பி. ஆகிறாரா அண்ணாமலை..? ஆந்திரா மூலம் நடக்கும் பேச்சுவார்த்தை
எம்.பி. ஆகிறாரா அண்ணாமலை..? ஆந்திரா மூலம் நடக்கும் பேச்சுவார்த்தை...
ஒரே நாளில் ரூ.2,200 உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்!
ஒரே நாளில் ரூ.2,200 உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்!...
காட்டி கொடுத்த 6-ஆம் விரல்... காதலியை எரித்த கொன்ற காதலன் கைது..!
காட்டி கொடுத்த 6-ஆம் விரல்... காதலியை எரித்த கொன்ற காதலன் கைது..!...
பைக் மீது லோடு ஆட்டோ உரசிய விவகாரத்தில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு
பைக் மீது லோடு ஆட்டோ உரசிய விவகாரத்தில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு...
நீலகிரி: இ-பாஸ் நடைமுறையில் முக்கிய மாற்றம்.. இன்று முதல் அமல்
நீலகிரி: இ-பாஸ் நடைமுறையில் முக்கிய மாற்றம்.. இன்று முதல் அமல்...
போப் பிரான்சிஸ் மறைவு - இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!
போப் பிரான்சிஸ் மறைவு - இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!...
சிஎஸ்கே இப்படி தடுமாறி பார்த்ததில்லை.. சுரேஷ் ரெய்னா ஆதங்கம்!
சிஎஸ்கே இப்படி தடுமாறி பார்த்ததில்லை.. சுரேஷ் ரெய்னா ஆதங்கம்!...
மதுரை சித்திரை திருவிழா.. அழகர் பயணமும் முக்கிய நிகழ்வுகளும்..!
மதுரை சித்திரை திருவிழா.. அழகர் பயணமும் முக்கிய நிகழ்வுகளும்..!...
மத்திய அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மத்திய அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!...