Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காஷ்மீர் போன்ற ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெறாது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

Chief Minister MK Stalin Rejects BJP's Terrorism Claim | தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 28, 2025) காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் பயங்கரவாத, இருப்பதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசிய நிலையில், அதற்கு முதலமைச்சர் பதில் அளித்து பேசியுள்ளார்.

காஷ்மீர் போன்ற ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெறாது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 28 Apr 2025 16:12 PM

சென்னை, ஏப்ரல் 28 : காஷ்மீர் (Kashmir) போன்ற ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெறாது என உறுதியளிக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் (Tamil Nadu Assembly) பேசியுள்ளார். தமிழ்நாட்டில் பயங்கரவாதம் இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி (BJP – Bharatiya Janata Party) சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறிய நிலையில், அதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் என்ன நடக்கிறது என கேள்வி எழுப்பிய அவர், அந்த இடங்களுக்கு இதுவரை பிரதமர் நரேந்திர மோடி செல்லவில்லை என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

சட்டமன்றத்தில் வானதி சீனிவாசனுக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 28, 2025) காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. காவல்துறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துறை என்பதால் காவல்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கினார். அதனை தொடர்ந்து, உறுப்பினர்களின் கேள்விக்கு முதலமைச்சர் பதில் அளித்தார். அப்போது, சட்டப்பேரவையில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு குறித்து பேசினார். அதுமட்டுமன்றி, தமிழ்நாட்டில் பயங்கரவாதம் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், வானதி சீனிவாசனுக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு குறித்து பேசியுள்ளார். அது அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்றது. அந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதேபோல காஷ்மீர் மாதிரி நடக்ககூடாது என்றும் அவர் பேசியுள்ளார். அதுமாதிரி தமிழ்நாட்டில் ஒரு விஷயம் நடைபெறவே நடைபெறாது என்று முதலமைச்சர் உறுதி அளித்தார்.

காஷ்மீர் போன்ற ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெறாது – முதலமைச்சர்

தொடர்ந்து பேசிய அவர், காஷ்மீர் விவகாரம் குறித்து நாங்கள் பேசும்போது ஒன்றிய அரசின் பாதுகாப்பு குறைப்பாடுகள் குறித்து நாங்கள் பேசவில்லை. அந்த செய்தியை கேள்வி பட்டதும் நீங்கள் எடுக்க கூடிய எந்த நடவடிக்கைக்கும் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும் என்றும் தான் நாங்கள் தெரிவித்தோம். எனவே எந்த காரணத்தை கொண்டும் தமிழ்நாட்டில் மதவாதம் உள்ளே நுழைய முடியாது என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை தராமல் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. எனவே தலைமையிடம் கூறி நிதியை பெற்று தர வேண்டும் என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வானதி சீனிவாசனிடம் கூறியுனார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிட் 3 படத்தை அவர்கள் பார்க்கவேண்டாம்.. இயக்குநர் வேண்டுகோள்!
ஹிட் 3 படத்தை அவர்கள் பார்க்கவேண்டாம்.. இயக்குநர் வேண்டுகோள்!...
பணப்பரிமாற்றத்தை எளிதாக்கிய EPFO: ஊழியர்களுக்கான நன்மைகள் என்ன?
பணப்பரிமாற்றத்தை எளிதாக்கிய EPFO: ஊழியர்களுக்கான நன்மைகள் என்ன?...
ஆந்திராவில் கோர விபத்து..! தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!
ஆந்திராவில் கோர விபத்து..! தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!...
லட்சுமிதேவி வாசம் செய்யும் அட்சய திருதியை வழிபாடு!
லட்சுமிதேவி வாசம் செய்யும் அட்சய திருதியை வழிபாடு!...
3வது குழந்தையைத் தத்தெடுத்த பராசக்தி நடிகை..!
3வது குழந்தையைத் தத்தெடுத்த பராசக்தி நடிகை..!...
கூகுள் போட்டோஸின் புதிய தொழில்நுட்பம் - ஆபத்தானதா?
கூகுள் போட்டோஸின் புதிய தொழில்நுட்பம் - ஆபத்தானதா?...
4 அணிகள் பிளே ஆஃப் செல்வது உறுதி! CSK, RR வெளியேறிவிட்டதா..?
4 அணிகள் பிளே ஆஃப் செல்வது உறுதி! CSK, RR வெளியேறிவிட்டதா..?...
பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் எல்லாம் பொய் - சுந்தர் சி ஓபன் டாக்!
பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் எல்லாம் பொய் - சுந்தர் சி ஓபன் டாக்!...
1.5 டன் ஏசி பயன்படுத்துகிறீர்களா? மாத மின் கட்டணம் எவ்வளவு ஆகும்?
1.5 டன் ஏசி பயன்படுத்துகிறீர்களா? மாத மின் கட்டணம் எவ்வளவு ஆகும்?...
கொரோனாவை கண்டறியும் நானோ தொழில்நுட்பம்.. பதஞ்சலி ஆய்வில் தகவல்
கொரோனாவை கண்டறியும் நானோ தொழில்நுட்பம்.. பதஞ்சலி ஆய்வில் தகவல்...
பெற்றோர்களின் விவாகரத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி இருந்தது?
பெற்றோர்களின் விவாகரத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி இருந்தது?...