Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னையில் திடீர் போக்குவரத்து மாற்றம்.. முக்கிய ரூட் இதுதான்… நோட் பண்ணுங்க!

Chennai Traffic Changes : தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான அண்ணா சாலையில் நான்கு வழி சாலை அமைத்தல் தொடர்பாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில், 2025 மே 4ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னையில் திடீர் போக்குவரத்து மாற்றம்.. முக்கிய ரூட் இதுதான்… நோட் பண்ணுங்க!
சென்னையில் போக்குவரத்து மாற்றம்Image Source: TV9
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 26 Apr 2025 06:12 AM

சென்னை, ஏப்ரல் 26: சென்னை அண்ணா சாலையில் 2025 மே 4ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. சோதனையில் அடிப்படையில் இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, பீக் ஹவரில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். தற்போது மெட்ரோ கட்டுமான பணிகள் நடைபெறுவதல் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் இருக்கிறது.

சென்னையில் திடீர் போக்குவரத்து மாற்றம்

குறிப்பாக, வடபழனி, கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர் போன்ற இடங்களில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதற்கிடையில், சாலை விரிவாக்கம், மேம்பாலம் அமைத்தல் போன்ற பணிகளும் ஆங்காங்கே நடந்து வருகிறது.

இதனால், அவ்வப்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான அண்ணா சாலையில் நான்கு வழி மேம்பால சாலை அமைத்த தொடர்பாக பணிகள் நடைபெற உள்ளது.  இதையொட்டி, அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

சோதனை அடிப்படையில் 2025 மே 4ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதனை அறிந்து வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை திட்டுமிட்டுக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் செனோடாப் சாலை – டர்ன்புல்ஸ் சந்திப்பு – வலதுபுறம் திரும்பி சேமியர்ஸ் சாலை (பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலை) – நந்தனம் சந்திப்பு மற்றும் இடது/வலதுபுறம் திரும்பி அண்ணா சாலை நோக்கி தங்கள் இலக்கை அடைய திருப்பி விடப்படும்.

எந்த ரூட்ல தெரியுமா?

சைதாப்பேட்டையிலிருந்து சேமியர்ஸ் சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் தடைசெய்யப்படுகிறது. அதற்கு பதிலாக, சேமியர்ஸ் சாலை நோக்கி வரும் வாகனங்கள் அண்ணா சாலை – செனோடாப் சாலை வழியாகச் சென்று சேமியர்ஸ் சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செனோடாப் சாலையிலிருந்து நுழைவு இருக்கும். காந்திமண்டபம் சாலையிலிருந்து வரும் வாகனங்களுக்கு நுழைவு இல்லை. இதேபோல், ரத்னா நகர் பிரதான சாலையும் செனோடாப் சாலையிலிருந்து ஒருவழிப் பாதையாக இருக்கும். அண்ணா சாலையிலிருந்து செனோடாப் சாலைக்கு நுழைவு இருக்காது.

அண்ணா சாலையிலிருந்து, செனோடாப் 1வது தெருவிலிருந்து நுழைவு அனுமதிக்கப்படும், ஆனால் செனோடாப் 1வது பிரதான சாலையிலிருந்து வரும் வாகனங்கள் அண்ணா சாலைக்குள் நுழைய முடியாது.

சீரான போக்குவரத்து வசதியை உறுதி செய்வதற்காக, அண்ணா சாலை, செனோடாஃப் சாலை, சேமியர்ஸ் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகன நிறுத்தம் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மூத்த குடிமக்களுக்கான FD-க்கும் 9.10% வரை வட்டி வழங்கும் வங்கிகள்
மூத்த குடிமக்களுக்கான FD-க்கும் 9.10% வரை வட்டி வழங்கும் வங்கிகள்...
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி இதுவரை வசூல் செய்தது இவ்வளவா?
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி இதுவரை வசூல் செய்தது இவ்வளவா?...
விஜய் சேதுபதிக்கு வில்லனாகக் களமிறங்கும் மலையாள பிரபலம்?
விஜய் சேதுபதிக்கு வில்லனாகக் களமிறங்கும் மலையாள பிரபலம்?...
லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் என்னிடம் கதை கூறினார்- நானி!
லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் என்னிடம் கதை கூறினார்- நானி!...
'கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது'- முதல்வர் ஸ்டாலின் பேச்சு
'கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது'- முதல்வர் ஸ்டாலின் பேச்சு...
டிரிபிள் நெகட்டிவ் மார்பகப் புற்றுநோயில் மைக்ரோஆர்என்ஏவின் பங்கு!
டிரிபிள் நெகட்டிவ் மார்பகப் புற்றுநோயில் மைக்ரோஆர்என்ஏவின் பங்கு!...
செந்தில் பாலாஜிக்கு பதில் மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் ரகுபதி
செந்தில் பாலாஜிக்கு பதில் மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் ரகுபதி...
கோடையில் குளிர்ச்சியாக, ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
கோடையில் குளிர்ச்சியாக, ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்?...
பஹல்காம் தாக்குதல்.. ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி முஸ்லீம்கள்
பஹல்காம் தாக்குதல்.. ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி முஸ்லீம்கள்...
கட்டாய வெற்றிக்காக காத்திருக்கும் KKR.. வாய்ப்பை பறிக்குமா PBKS?
கட்டாய வெற்றிக்காக காத்திருக்கும் KKR.. வாய்ப்பை பறிக்குமா PBKS?...
உங்கள் ஸ்மார்ட்போனில் அடிக்கடி Internet கோளாறு ஏற்படுகிறதா?
உங்கள் ஸ்மார்ட்போனில் அடிக்கடி Internet கோளாறு ஏற்படுகிறதா?...