இனி கேஸ் தட்டுப்பாடே இருக்காது… வீடுதோறும் வரும் குழாய் வழி எரிவாயு திட்டம்

Piped Natural Gas: சென்னையின் பல பகுதிகளில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு (LPG) விநியோகிக்க ரூ. 48 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் (TNCZMA) ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த வகை திட்டங்கள், இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்கவும், சுற்றுச்சூழலுக்கு நேரும் பாதிப்புகளை குறைக்கவும் எதிர்காலத்தில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி கேஸ் தட்டுப்பாடே இருக்காது... வீடுதோறும் வரும் குழாய் வழி எரிவாயு திட்டம்

வீடுதோறும் வரும் குழாய் எரிவாயு திட்டம்

Published: 

19 Apr 2025 06:33 AM

சென்னை ஏப்ரல் 19: சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு LPG (Liquefied Petroleum Gas) வழங்க ரூ.48 கோடி மதிப்பில் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. மொத்தம் 466 கிலோமீட்டர் குழாய் அமைக்கப்படவுள்ளது, இதில் 260 கிலோமீட்டர் கடலோர ஒழுங்குமுறை (Coastal Regulation Zone) பகுதிகளில் பகுதிகளில் உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிவாயு இறக்குமதி செலவைக் குறைக்கும் நோக்கில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. திட்டம் வெட்டுவாங்கேணி முதல் நெட்டுக்குப்பம் வரை (From Vettuvankeri to Nettukuppam) பல பகுதிகளில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை டோரண்ட் கேஸ் நிறுவனம் செயல்படுத்துகிறது. இத்திட்டம் இயற்கை எரிவாயு பயன்பாட்டை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிவாயு இறக்குமதி செலவைக் குறைக்கும் நோக்கில் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு வழங்கபபடவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தமாக 466 கிலோமீட்டர் நீளத்திற்கு குழாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 260 கி.மீ. Coastal Regulation Zone (CRZ) பகுதிகளாகும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, செலவுக் குறைப்பு நோக்கம்

சுற்றுச்சூழலை பாதுகாப்பது, சமையல் எரிவாயுவின் இறக்குமதிச் செலவைக் குறைப்பது மற்றும் எரிவாயு பயன்பாட்டை ஊக்குவிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு தமிழக அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னையில் எங்கெல்லாம் தொடக்கம்?

சென்னையின் முக்கிய பகுதிகளில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மற்றும் அதன் புறநகர பகுதிகளான:

வெட்டுவாங்கேணி

நீலங்காரை

திருவான்மியூர்

அடையார்

சேப்பாக்கம்

பாரிஸ் கார்னர்

ராயபுரம்

தண்டையார்பேட்டை

திருவொற்றியூர்

எண்ணூர்

நெட்டுக்குப்பம்

இவற்றில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்கப்படும்.

டோரண்ட் கேஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்த திட்டம்

இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை டோரண்ட் கேஸ் (Torrent Gas) நிறுவனம் ஏற்றுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் அனுமதியுடன், மாநில அளவிலான கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலும் பெற்றுள்ளது.

466 கிலோமீட்டர் நீளத்திற்கு குழாய் அமைக்கப்படுகிறது

திட்டத்தின் முக்கிய அம்சங்களாக, மொத்தமாக 466 கிலோமீட்டர் நீளத்திற்கு குழாய் அமைக்கப்படவுள்ளது. இதில் மட்டும் 260 கி.மீ நீளமான பகுதி கடலோர ஒழுங்குமுறை (CRZ) பகுதிகளில் இருக்கிறது. ரூ. 48 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதுடன், டோரண்ட் கேஸ் நிறுவனம் இதனை அமல்படுத்தும் பொறுப்பை ஏற்றுள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த வகை திட்டங்கள், இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்கவும், சுற்றுச்சூழலுக்கு நேரும் பாதிப்புகளை குறைக்கவும் எதிர்காலத்தில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டம்

வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டம் என்பது ஒரு நகர்ப்புற மற்றும் நகரமயமான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, சிலிண்டர் மூலம் அல்லாமல் நேரடியாக குழாய் வாயிலாக எரிவாயு (பைப்லைன் கேஸ்) வழங்கும் ஒரு வசதியாகும். இது “பைப்லைன் எல்பிஜி” அல்லது “PNG” (Piped Natural Gas) என அழைக்கப்படுகிறது.