Stupid என திட்டிய பெண்… ஆபாசமாக பேசி அடிக்க முயன்ற ஆட்டோ டிரைவர்… திருவான்மியூரில் பரபரப்பு!
Chennai Auto Driver Harassed Women : சென்னை திருவான்மியூரில் வங்கதேசத்தைச் சேர்ந்த பெண்ணை ஆட்டோ டிரைவர் தகாத வார்த்தைகளால் பேசி அடிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு சென்னை பாதுகாப்பான இடம் இல்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

சென்னை ஆட்டோ ஓட்டுநர்
சென்னை, ஏப்ரல் 27: சென்னை திருவான்மியூரில் Stupid என திட்டி பணத்தை தூக்கி ஏறிந்ததால், வடமாநில பெண்ணை ஆட்டோ டிரைவர் தகாத வார்த்தைகளால் பேசி அவரை அடிக்க முயன்றுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக வேகமாக பரவியது. இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், அந்த சம்பவத்தின் வீடியோ அந்த தனது பேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கியது. மேலும், அந்த ஆட்டோ டிரைவர் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
Stupid என திட்டிய வடமாநில பெண்
வங்கதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் படிப்பதற்காக சென்னைக்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே வந்திருக்கிறார். இவர் கோட்டுர்புரத்தில் தங்கி இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில், சம்பவந்தன்று இவர் கோட்டூர்புரத்தில் இருந்து திருவான்மியூர் கடற்கரைக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக ஆட்டோ ஒன்றையும் புக் செய்துள்ளார்.
163 ரூபாய் ஆட்டோ கட்டணமாக செலுத்தி வேண்டி இருக்கிறது. இதில், அந்த பெண்ணிடமும், ஆட்டோ டிரைவிடம் சில்லறை இல்லாமல் இருந்துள்ளது. இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த பெண்ணை ஆட்டோ டிரைவர் ஆபாசமாக பேசி அடிக்க முயன்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் தனது பேஸ்புக் வீடியோவுடன் பதிவிட்டு, சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் இல்லை என்று பதிவிட்டார். இதனை பதிவிட்ட சில நிமிடங்களிலேயே வீடியோவை டெலிட் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், அந்த பெண் வீடியோவில் தன்னிடம் சில்லறை இல்லை என்றும், ரூ.200 தான் இருப்பதாகவும் தனக்கு சில்லறை வேண்டும் என்றும் கூறுகீறார். அதற்கு ஆட்டோ ஓட்டுநர் என்னோட காசு வேண்டும் என்று கூறுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் தொடங்கியது.
அடிக்க முயன்ற ஆட்டோ டிரைவர்
ஒரு கட்டத்தில் அந்த பெண் stupid என திட்டிவிட்டு, பணத்தை தூக்கி ஏறிந்து செல்கிறார். இதில் ஆத்திரம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி, எச்சில் துப்பியும், தாக்கவும் முயன்றுள்து வீடியோவில் காட்டுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த தனது பேஸ்புக் பதிவில், இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் நம்பினேன். ஆனால், ஆனால் இன்று சென்னை பெண்களுக்குப் பாதுகாப்பானது அல்ல என்று உணர்க்கிறேன். இதில் மோசமான விஷயம் என்னவென்றால், யாரும் உதவிக்கு கூட வரவில்லை.
கண்டு காணாமல் மக்கள் சென்று வருகின்றனர்.நம்பர் பிளேட் இல்லாத ஆட்டோக்களை சுதந்திரமாக இயக்க எப்படி அனுமதிக்கிறது? என்று குறிப்பிட்டு இருந்தார். இதனை அடுத்து, அந்த பெண் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் அவரை பிடித்து கேள்வி எழுப்பியபோது, அவர் தன் மேல் தவறு என்று கூறி மன்னிப்பு கோரினார். மன்னிப்பு கேட்டதை அடுத்து, அந்த பெண் புகாரை திரும்ப பெற்றதாக கூறியுள்ளார்.