பயணிகளே கவனிங்க.. சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. வெளியான முக்கிய அறிவிப்பு!
Chennai Metro Train: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, 2025 ஏப்ரல் 10ஆம் தேதியான இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அதன்படி, காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை 6 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.

சென்னை மெட்ரோ ரயில்
சென்னை, ஏப்ரல் 10: சென்னையில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 2025 ஏப்ரல் 10ஆம் தேதியான இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் பொது போக்குவரத்து சேவைகளில் மெட்ரோ ரயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. மெட்ரோ ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்
இதில் பயணிக்க எளிதாக இருப்பதால் பயணிகள் இதையே தேர்வு செய்து பயணித்து வருகின்றனர். அதற்கு ஏற்ப, மெட்ரோ ரயில் நிர்வாகமும் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும், இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில் ரயில்களை இயக்குவதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், 2025 ஏப்ரல் 10ஆம் தேதி (இன்று) மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதனால் 2025 ஏப்ரல் 10ஆம் தேதியான இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
என்ன தெரியுமா?
On account of Mahaveer Jayanthi Festival on 10-04-2025 (Thursday).
Saturday Timetable will be followed tomorrow (10-04-2025).Metro Train service will operate from 05:00 hrs to 23:00 hrs with the following frequency:
08:00 hrs – 11:00 hrs & 17:00 hrs- 20:00 hrs headway : Metro…
— Chennai Metro Rail (@cmrlofficial) April 9, 2025
அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் சேவை காலை 5 முணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை ஒவ்வொரு 6 நிமிடங்களுக்கு ரயில்கள் இயக்கப்படும்.
காலை 5 மணி முதல் காலை 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை, இரவு 8 மணி முதல் 10 மணி வரை ஒவ்வொரு 7 நிமிடங்களுக்கு ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் இரவு 11 மணி வரை ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் இந்த நேர அட்டவணையை கருத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில், 2025 மார்ச் மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் 92.10 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். கடந்த 2025 பிப்ரவரி மாதத்தை விட 5.44 லட்சம் பயணிகள் மார்ச் மாதத்தில் அதிகமாக பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.